கோவையில் 6 ஆதரவாளர்கள் காங்கிரசில் இருந்து நீக்கம்: இளங்கோவனுக்கு ப.சிதம்பரம் கண்டனம்
சென்னை: கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமது 6 ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பொறுப்பு ஏற்றதில் இருந்து அவருக்கும் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாவும் மேலிட பொறுப்பாளரும் இரண்டு தரப்பிலும் உரிய விளக்கம் கேட்டு சமாதனம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் ஐ.என்.டி.யு.சி. பொதுச் செயலாளர் கோவை செல்வம், பேரூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் வி.திருமூர்த்தி, முன்னாள் மாநகரச் செயலாளர் காட்டூர் சோமு, சிறுபான்மையினர் பிரிவுத் தலைவர் ஏ.எம்.ரபீக், முன்னாள் கவுன்சிலர் ராம்நகர் சீனிவாசன், காங்கிரஸ் சேவாதளம் மாவட்டத் தலைவர் ஹரிகரன் ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கடந்த 15-ந் தேதி தமிழக காங்கிரஸ் அறிவித்திருந்தது.
நீக்கப்பட்ட இந்த 6 பேருமே ப. சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் ஆவர். இந்நிலையில் ப.சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஆறு உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. ஒருவரிடம் விளக்கம் கேட்காமலும், விசாரணை நடத்தாமலும், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஒப்புதலைப் பெறாமலும் கட்சியின் உறுப்பினரை நீக்க முடியாது.
இந்த நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இந்த நிகழ்வைக் கருத்தில் கொண்டு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications