பச்சை தமிழகம் புதிய கட்சியை தொடங்கினார் சுப. உதயகுமார்
சென்னை: பச்சை தமிழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார் சுப.உதயகுமார்.
சென்னை: கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் பச்சைத் தமிழகம் என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பச்சை தமிழகம் என்ற அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமது போராட்டத்திற்கு எந்த அரசியல் கட்சியும் உடன்படாததால் உரிமைகளை பாதுகாக்க புதிய கட்சி தொடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறினார்.
ஆம் ஆத்மி கட்சி டெல்லியை வைத்து மட்டுமே தமிழகத்திலும் அரசியல் செய்வதாகவும், தமிழக பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் அக்கட்சியை விட்டு வெளியேறியதாகவும் உதயகுமார் தெரிவித்தார்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தமது கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும் அவர் கூறினார். பசுமை தமிழகத்தை விரும்பும் அமைப்புகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாகவும், கட்சிகள் உடனான கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பச்சைத்தமிழகம் இயக்கம் பற்றி பேசிய சுப. உதயகுமார் , இது ஒரு அரசியல் இயக்கம். ஆனால் தேர்தலுக்கு ஆயத்தம் செய்கிற அரசியல் கட்சி அல்ல என்று கூறியிருந்தார். இந்த இயக்கத்தில் எந்த அரசியல் கட்சியில் இருப்பவர்களும், எந்த இயக்கத்தில் இருப்பவர்களும், தங்களது அடையாளங்களை இழக்காமல் சேரலாம். ஆனால் பச்சைத்தமிழகம் இயக்கத்தின் கருத்துக்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அதிகார பரவல், பங்கேற்பு ஜனநாயகம், பெண் விடுதலை, இயற்கையை அழிக்காத வளம்குன்றா வளர்ச்சி முறை, இயற்கை வேளாண்மை, சிறு நடுத்தர தொழில், மரபு சார்ந்த மக்கள் அமைப்புகள் ஆகியவைகள்தான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
தமிழகத்தில் இன்று ஒரு மடைமாற்று தந்திரம் நடந்து கொண்டு இருக்கிறது. மக்களை குடிகாரர்களாக்கி கையறு நிலைக்கு தள்ளி அவர்களை கையேந்துபவர்களாக, இலவசங்களை கண்டு ஏமாறுபவர்களாக மாற்றி வருகிறார்கள். அதற்கு இந்த இயக்கம் முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் கூறினார். இந்த நிலையில் பச்சை தமிழகம் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார் சுப. உதயகுமார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications