67 பேருடன் பைனான்ஸ் அதிபர் உல்லாசம்.. விற்பனையில் சிடி.. தவிப்பில் பெண்கள்!
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில், கடன் வாங்க வந்த பெண்களை வசியப்படுத்தி அவர்களுடன் உல்லாசமாக இருந்து சிக்கிய தொழிலதிபரின் செல்போனில் இருந்த, அவர் பெண்களுடன் உறவு கொள்ளும் காட்சிகள் அடங்கிய சிடி பாலக்கோடு பகுதியில் படு வேகமாக விற்று வருவதால், அந்த காட்சிகளில் இடம் பெற்றுள்ள பெண்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். பொதுமக்களும் இந்த சிடி விற்பனையை தடுக்க வேண்டும் என்று போலீஸாருக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.
பாலக்கோடு அருகேயுள்ள மந்தவெளியை சேர்ந்தவர் சிவராஜ். பாலக்கோட்டில் நிதி நிறுவனம் நடத்தி வரும் இவர் வட்டிக்குப் பணம் கொடுத்து வருகிறார். இவரிடம் பெரும்பாலும் பெண்கள்தான் கடன் வாங்கியுள்ளனர்.
இப்படிக் கடன் வாங்கிய பெண்கள் அதைக் கட்ட முடியாமல் போகும்போது, தனது அலுவலகத்தில் வேலைக்கு வைத்திருந்த ஒரு பெண் ஊழியர் மூலம் அந்தப் பெண்களிடம் தன்னுடைய ஆசைக்கு உடன்பட்டால் வட்டியைத் தள்ளுபபடி செய்வதாக ஆசை காட்டி வலையில் வீழ்த்தி உறவு கொண்டுள்ளார் சிவராஜ்.
இப்படிப்பட்ட செயல்களுக்காகவே அவர் தனியாக ஒரு பண்ணை வீட்டையும் வைத்திருந்தார். அந்த வீட்டில் தான் உறவு கொள்ளும்போது அந்தக் காட்சியை ரகசியமாக தனது செல்போனில் படம் பிடித்து வைத்துக் கொண்டுள்ளார்.
இவரது இந்த செயல்களுக்கு சிவராஜின் நிறுவனத்தில் பணியாற்றிய பெண்தான் பாலம் போல செயல்பட்டு வந்துள்ளார். இப்படியே 67 பெண்கள் வரை அவர் உறவு வைத்திருந்தார். பலரிடம் பலமுறை கூட உறவு வைத்துக் கொள்வாராம் சிவராஜ்.
இந்த நிலையில் சமீபத்தில் சிவராஜின் செல்போன் பழுதாகவே அவர் அதைப் பழுது பார்க்கக் கொடுத்துள்ளார். செல்போன் கடைக்காரர், அந்த போனின் மெமரி கார்டைப் பரிசோதித்தபோது அதில் சிவராஜின் லீலைகள் அடங்கிய வீடியோ காட்சிகள் இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார். உடனே அதை அப்படியே டவுன்லோடு செய்து கொண்டு தனக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைத்தார். இது காட்டுத் தீயாக பரவி போலீஸ் பார்வைக்கும் போனது.
உடனடியாக விசாரணையில் குதித்த போலீஸார் சிவராஜைக் கைது செய்தனர். அவரது செல்போனில் 27 பெண்களுடன் அவர் இருந்த காட்சிகள் இருந்தது. மொத்தம் 67 பெண்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
தற்போது இந்த ஆபாச வீடியோ காட்சிகள் இடம் பெற்ற சிடிக்கள் பாலக்கோடு, தர்மபுரி ஆகிய பகுதிகளில் விற்பனையாகி வருகிறதாம். இது வேகமாகப் பரவி வருவதால் இந்தக் காட்சிகளில் இடம் பெற்றுள்ள குடும்பப் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குடும்பத்தில் குழப்பம் வருமோ என்று பீதிக்குள்ளாகியுள்ளனர்.
பொதுமக்களும் இந்த சிடிக்கள் விற்பனையை போலீஸார் கண்டுபிடித்துத் தடுக்க வேண்டும், இதை விற்பவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications