பழனி முருகன் கோவில் உண்டியல் திறப்பு...ரூ.1.37 கோடி, தங்கம், வெள்ளி, வெளி நாட்டு கரன்சி வசூல்...
பழனி : முருகன் கோவில் உண்டியல் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. அதில் 1.37 கோடி ரூபாய், தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகளும் கிடைத்துள்ளன.
பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பண்டிகை நாட்களில் பக்தர்களின் எண்கிக்கை லட்சத்தை தாண்டும்.

அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக் கடனாகவும், காணிக்கையாகவும், உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி ஆபரணங்கள் செலுத்துவதும் வழக்கம். மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்கள் நாட்டு கரன்சிகளையும் உண்டியலில் செலுத்துகின்றனர்.
இந்த நிலையில், உண்டியல் நேற்று திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. கடந்த 20 நாள் வசூலான உண்டியல் காணிக்கையில் ரொக்கமாக 1 கோடியே 37 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் வசூலாகியுள்ளது. பணம் தவிர 630 கிராம் தங்கம் மற்றும் 8 ஆயிரத்து 500 கிராம் வெள்ளி, வெளிநாட்டு கரன்சி 677 நோட்டுகள் வசூலாகியுள்ளது.












Click it and Unblock the Notifications