கருணாநிதியை முதலமைச்சர் ஆக்கினால் மட்டுமே அமைதியாக இருப்பார்.. பண்ருட்டி ராமச்சந்திரன்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை முதலமைச்சராக்கினால் மட்டுமே அமைதியாக இருப்பார் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் சென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முதல்வர் ஜெயலலிதா குணம் அடைந்து வருகிறார். நல்ல உடல் நலத்தோடு இருக்கிறார். விரைவில் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார்.

மருத்துவர் குழுவினர் அவரது உடல் நிலையை கண்காணித்து வருகிறார்கள். முதல்வரை பற்றி வதந்திகள் பரப்பப்படுகிறது. அதை யாரும் நம்ப வேண்டாம். இந்த தருணத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணம் அடைய பிரார்த்திப்போம்.
காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கர்நாடக அரசும், மத்திய அரசும் நிறைவேற்றாதது வேதனை அளிக்கிறது. பொறுப்புக்களை மாற்றி கொடுத்ததற்கு முதலமைச்சர் கையெழுத்து போட்டாரா? என்று கருணாநிதி பேசியிருக்கிறார். அவர் என்ன வேண்டுமானாலும் சொல்வார். அவரை முதலமைச்சர் ஆக்கினால் மட்டுமே சும்மா இருப்பார். கருணாநிதியின் கேள்விகளை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
-
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
வேலுமணி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா! எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சி! -
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய் -
எடப்பாடி செய்த அந்த 3 தவறுகள்.. "முக்குலத்தோர் கோபம்.." உடைந்து சிதற போகுது கட்சி? அடுத்து என்ன -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா












Click it and Unblock the Notifications