இஸ்லாமிய உறவுகளுக்கு ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள்.. பண்ருட்டி வேல்முருகன்
சென்னை: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன், ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,
ஈகைத் திருநாள் எனும் ரமலான் பெருநாளை கடைபிடிக்கும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் அன்பான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எங்களது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாமிய மக்களின் புனிதக் கடமைகளில் ஒன்றாக ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. அன்பு, ஈகை, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பது பெருமகனார் நபிகள் நாயகத்தின் போதனை.
இந்த கோட்பாடுகளை ஜாதி மதங்களைக் கடந்து நாம் அனைவரும் என்றென்றும் கடைபிடிக்க ரமலான் திருநாளில் உறுதியேற்போம்.
உலகெங்கும் ஜாதி, மதம், இனம், கலாசாரம் எனப் பலவற்றின் பெயரால் நிகழ்த்தப்படுகிற ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஓரணியில் திரளவும் பூமிப் பந்தெங்கும் மனித நேயம் மலரவும் இந்த ரமலான் திருநாளில் சூளுரை ஏற்போம்.
அண்ணல் நபிகள் நாயகத்தின் போதனை நெறிகளை ஏற்று சகோதரத்துவமும் அனைத்து சமூகங்களிடையேயான ஒற்றுமை நீடித்து நிலைக்கவும் ரமலான் திருநாளில் உறுதியேற்போம்.
இந்த நன்னாளில் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications