ஆக்ஸிடென்ட் ஆன பின்னும் பரீட்சை எழுதிய பண்ருட்டி மாணவி
பண்ருட்டி: தேர்வெழுதச் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த பண்ருட்டி மாணவி மருத்துவமனையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதினார்.
கடலூர் பண்ருட்டியை அடுத்த வீரபெருமாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பாக்கியலட்சுமி அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 10ம்- வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில் இன்று துவங்கிய பொதுத்தேர்வை ஒட்டி, பண்ருட்டியில் உள்ள சுப்ராயலு செட்டியார் அரசு பெண்கள் மேநிலைப்பள்ளியில் தேர்வுமையத்திற்கு தனது சகோதரர் ஆனந்தபாபுவுடன் மொபட்டில் செல்லும் போது அங்குச்செட்டிப்பாளையத்தில் எதிரே வந்த மற்றொரு பைக்கில் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் மாணவியும், அவரது சகோதரரும் காயமடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் சொல்லி வரவழைத்து பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
பலத்தக் காயம் ஏற்பட்டிருந்ததால், பின்னர் அங்கிருந்து கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
காயமடைந்த நிலையில் மாணவி தேர்வெழுத வேண்டும் அனுமதிக்கவேண்டும் என மருத்துவ உதவியாளர் மலர் என்பவரிடம் விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் விருப்பம் குறித்து மருத்துவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் மூலம் மாணவி மருத்துவமனையிலேயே தேர்வெழுத சிறப்பு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து மாணவி மருத்துவமனையிலேயே தேர்வெழுதினார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications