களை கட்டும் தேர்தல் திருவிழா... "பந்தோபஸ்து"க்காக சென்னை வந்தனர் துணை ராணுவத்தினர்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக இன்று 18 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவத்தினர் சென்னை வந்துள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளன. இத்தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. எனவே, தேர்தல் பாதுகாப்பு பணியில் கூடுதல் துணை ராணுவப் படையினரை ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
முன்னதாக தமிழக தேர்தல் பாதுகாப்புக்காக முதலில் 275 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் மட்டுமே வருவதாக இருந்தது. ஆனால், அதனைத் தொடர்ந்து பறக்கும் படையில் கூடுதல் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

கூடுதல் வீரர்கள்...
இதனால், 300 கம்பெனி ராணுவ வீரர்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள். ஒரு கம்பெனியில் 72 முதல் 100 வீரர்கள் இருப்பார்கள். வடமாநிலங்களில் இருந்து துணை ராணுவ வீரர்கள் தனி ரயில் மூலம் தமிழகம் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை வந்தனர்...
இந்நிலையில், ரயில் மூலமாக தமிழக சட்டசபைத் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 18 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவத்தினர் கொல்கத்தாவிலிருந்து இன்று சென்னை வந்துள்ளனர். இன்னும் சில நாட்களில் மேலும் துணை ராணுவத்தினர் தமிழகம் வர உள்ளனர்.

பாதுகாப்பு...
மொத்தம் ஐந்து ஆயிரத்திற்கும் அதிகமான துணை ராணுவ வீரர்கள் நேற்றும், இன்றும் தமிழகம் வந்துள்ளனர். தமிழகம் முழுவதும் பதற்றமானவைகளாகக் கருதப்படும் வாக்குச்சாவடிகளில் இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உத்தரவு...
தற்போது தமிழகம் வந்துள்ள துணை ராணுவத்தினர், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்ட தலைநகரங்களில் உள்ள எஸ்.பி., அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications