நடத்தையில் சந்தேகம்.. தாய், தந்தை, தம்பி சரமாரியாக கத்தியால் குத்து.. உயிரை விட்ட பெண்!

பெற்ற மகளை பெற்றோர் அடித்து கொன்றிருக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

தேனி: நடத்தையில் சந்தேகம் என்பது பொதுவாக கணவன் - மனைவி இடையேதான் எழும். ஆனால் தேனி அருகே உடன்பிறந்த அக்கா மீது தம்பிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சந்தேகம் அக்காவை கொலை செய்யும் அளவுக்கு துணிந்துவிட்டது.

தேனி அருகே கோட்டூரில் வசித்து வரும் தம்பதி கருப்பையா - பேச்சியம்மாள். இவர்களுக்கு ஜெயந்தி மாலா என்ற மகளும், செல்வக்குமார் மகனும் உள்ளனர். ஜெயந்தி மாலாவுக்கு 25 வயதாகிறது, செல்வக்குமாருக்கு 23 வயதாகிறது. செல்வக்குமார் ஒரு ஈரோட்டில் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

 வேலைக்கு சென்றார்

வேலைக்கு சென்றார்

ஜெயந்தி மாலாவுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. ஆனால் திருமணமானது முதலே கணவருடன் தகராறில்தான் வாழ்ந்து வந்திருக்கிறார். அளவு கடந்த பிரச்சனை இருவருக்குள்ளும் வந்துவிட்டதால், குழந்தையை தூக்கிக் கொண்டு அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார் ஜெயந்திமாலா. மேலும் சும்மா வீட்டில் இருக்க பிடிக்காமல் வேலைக்கும் சென்று வந்துள்ளார்.

 நடத்தையில் சந்தேகம்

நடத்தையில் சந்தேகம்

கடந்த 10 தினங்களுக்கு முன்பு தம்பி செல்வகுமாருக்கு லீவு கிடைக்கவே ஈரோட்டிலிருந்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தனது அக்காவின் நடத்தையில் தம்பிக்கு சந்தேகம் ஏற்பட்டது. தன் அக்கா யார்கூடவோ பழகி கொண்டிருப்பதாக நினைத்தார். இதனை வீட்டில் தன் அம்மா, அப்பாவிடம் செல்வக்குமார் சொல்லி இருக்கிறார். இதனை நம்பிய பெற்றோரும் மகளை எப்ப பார்த்தாலும் திட்டிக் கொண்டும், சந்தேகப்பட்டுக் கொண்டும் இருந்திருக்கிறார்கள்.

 சரமாரியாக குத்தினார்கள்

சரமாரியாக குத்தினார்கள்

கணவன் வீட்டில்தான் தகராறு என்று அம்மா வீட்டுக்கு வந்தால், இங்கேயும் தகராறு என்று மனம் நொந்து உள்ளார் ஜெயந்திமாலா. சம்பவத்தன்றும் இப்படித்தான் வாக்குவாதம் தகராறாக மாறி பிரச்சனை வெடித்தது. தாய்-தகப்பன்-தம்பி என மூன்று பேரும் சேர்ந்து கொண்டு ஜெயந்திமாலாவை தாக்க ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் 3 பேரும் அருகில் கிடந்த கத்தியை எடுத்து ஜெயந்திமாலாவை சரமாரியாக குத்தினார்கள்.

 கைதான பெற்றோர்

கைதான பெற்றோர்

அப்போதும் ஆத்திரம் தீராமல் கடப்பாரையால் கொண்டு அடித்து சாய்த்தார்கள். இதில் ஜெயந்திமாலா சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் பிணமானார். தகவலறிந்து வீரபாண்டி போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் செல்வக்குமார் எஸ்கேப். பெத்த பிள்ளையை கொன்று விட்டு பிணத்தின் அருகே நின்று கொண்டிருந்த ஜோடி கருப்பையா - பேச்சியம்மாளை கைது செய்தனர். இதுகுறித்து விசாரணையை விரிவுபடுத்தியுள்ள போலீசார் செல்வக்குமாருக்கு தப்பி ஓடிய வலை வீசியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+