நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்கும் அதிகாரம் தலைவருக்கே.. ஸ்டாலின் பேச்சுக்கு அழகிரி பதில்
சென்னை: கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ளும் அதிகாரம் தலைவருக்கும், பொதுச் செயலாளருக்கும் மட்டுமே உண்டு எனத் தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.
சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த திமுக பொருளாளர் ஸ்டாலின், ‘கட்சியில் இருந்து நீக்கப் பட்டவர்கள் மற்றும் விலகியவர்கள் வருத்தம் தெரிவித்து மீண்டும் திரும்பினால் அவர்களை ஏற்றுக் கொள்ள திமுக எப்போதும் தயாராக இருக்கிறது என தெரிவித்திருந்தார்.

கட்சி விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக திமுகவில் இருந்து நீக்கப் பட்ட மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுக்கும் படி கூறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் உலவும் நிலையில், ஸ்டாலினின் இந்த பேட்டி பரபரப்பை உண்டாக்கியது.
இந்நிலையில், இன்று மதியம் சென்னை வந்துள்ள மு.க.அழகிரி. விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, ஸ்டாலினின் பேட்டி தொடர்பாக எழுப்பப் பட்ட கேள்விக்கு, ‘கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ளும் அதிகாரம், தலைவருக்கும், செயலாளருக்கும் மட்டுமே உண்டு,' என அழகிரி பதிலளித்தார்.
அதேபோல், ஜி.கே.வாசன் புதிய கட்சி துவங்கி இருப்பது குறித்த கேள்விக்கு, ‘அது அவரது ஜனநாயக உரிமை' என அவர் தெரிவித்தார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications