பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - பட்டுக்கோட்டையில் பரபரப்பு
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் பாஜக பிரமுகர் வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகள் மற்றும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வக்கீல் முரளிகணேஷ், பாஜகவின் மாநில வக்கீல் பிரிவு துணைத்தலைவராக உள்ளார். கடந்த ஒரு வார காலமாகவே முரளிகணேசின் செல்போனிற்கு தரக்குறைவாக மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் முரளி கணேஷ் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீதும், வீட்டின் மாடி மீதும் பெட்ரோல் குண்டுகளையும், கற்களையும் வீசி தாக்கியுள்ளனர்.
சம்பவம் நடந்த போது முரளிகணேஷ் வீட்டில் இல்லை எனத் தெரிகிறது. சத்தம் கேட்டு அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்கள் வெளியில் வந்து பார்த்ததும், மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுவிட்டனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் முன் விரோதத்தினால் நடந்துள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பட்டுக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பட்டுக் கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications