பட்டப்பகலில் கல்லூரி மாணவன் கொலை.. வள்ளியூரில் மக்கள் சாலை மறியல்.. போலீஸ் தடியடி!
வள்ளியூர்: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சாலைமறியல் செய்தவர்களை தடியடி நடத்தி போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம், வள்ளியூர் அடுத்த நம்பியான்விளையைச் சேர்ந்தவர் டேவிட் ராஜா. இவர் வள்ளியூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.

இன்று இவர் கல்லூரிக்கு சென்ற போது ஒரு மர்ம கும்பல் வழிமறித்து அவரை சராமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இது குறித்து தகவல் அறிந்த அம்மாணவனின் உறவினர்கள் கொலைக் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி நெல்லை-நாகர் கோவில் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்.

போலீசார் மறியலில் ஈடுப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பலனில்லாததால் கூட்டத்தை கலைக்க தடியடி பிரயோகம் நடத்தினர். இதில் சிலர் காயமடைந்தனர்.

50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் .இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

மாணவன் கொலையால் வள்ளியூர்,மற்றும் சுற்றுவட்டராப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் பேருந்துக்களை பாதுகாப்போடு அனுப்ப போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அசம்பாவிதங்களை தடுக்க அதிரடி படையினர் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
படங்கள்: ஜெபக்குமார்
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications