மோடி, லேடி, டாடிக்கு மக்கள் டாட்டா காட்டுவார்கள்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ஈரோடு: மோடி, லேடி, டாடிக்கு மக்கள் டாட்டா காட்டுவார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திருப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோடு கச்சேரி வீதியில் இருக்கும் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு மனைவி வரலட்சுமியுடன் சென்று வாக்களித்தார்.
வாக்களித்த பிறகு இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஓட்டுக்கு பணம்
மக்கள் காலை முதல் சுறுசுறுப்பாக வாக்களித்து வருகிறார்கள். பெரும்பாலானோர் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. வாக்குப்பதிவு தினமான இன்று கூட அதுவும் வாக்குச்சாவடிக்கு அருகில் வைத்து ஆளுங்கட்சியினர் பணப் பட்டுவாடா செய்தனர்.

லேடி, டாடி
மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை பார்த்தால் இந்த தேர்தலில் மோடி, லேடி, டாடி ஆகியோருக்கு அவர்கள் டாட்டா காண்பித்துவிடுவார்கள் போல.

காங்கிரஸ்
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டுடன் நடப்பது போல் பாவலா செய்கிறது.

தேர்தல் ஆணையம்
விதிமீறல் குறித்து போன் செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள். ஆனால் புகார் செய்தால் 10 நிமிடம் கழித்து போன் செய்து நீங்கள் கூறிய இடத்திற்கு சென்றோம் அங்கு எதுவும் நடக்கவில்லையே என்கிறார்கள் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications