ராகுலின் பேச்சை பார்த்து மக்கள் பாஜகவுக்கு தான் வாக்களிப்பார்கள்: இல. கணேசன்

பாட்னா குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த ஆர்ப்பபாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் பேசுகையில்,
புத்தர் ஞானம் பெற்ற பூமியில், அஹிம்சையை போதித்த மகாத்மா காந்தியின் பெயரில் இருக்கும் மைதானத்தில் அதுவும் அவரது சிலைக்கு கீழே குண்டுகள் வெடித்துள்ளன. நரேந்திர மோடி பிரதமர் ஆவதை எந்த ஒரு சக்தியாலும் தடுக்க முடியாது. எப்பொழுது தேர்தல் நடந்தாலும் மோடிக்கு ஆதரவளிக்க மக்கள் தயாராக உள்னர்.
அதனால் காங்கிரஸும், மார்க்சிஸ்ட் கட்யினரும் சேர்ந்து தேர்தலை மத ரீதியில் கொண்டு செல்ல முயல்கிறார்கள். மத கலவரங்களுக்கு பாஜக தான் காரணம் என்று ராகுல் காந்தி பொறுப்பில்லாமல் பேசி வருகிறார்.
தேர்தலில் பாஜக வெற்றி பெற நாங்களோ, மோடியோ பிரச்சராம் செய்ய வேண்டியதில்லை. ராகுல் போகிற இடமெல்லாம் பேசுவதை பார்த்துவிட்டு இவர் கையில் நாடு சென்றால் வீணாகிவிடும் என்று மக்களே எங்களுக்கு வாக்களிப்பார்கள்.
எந்த கட்சி ஆட்சியை பிடித்தாலும் தேசவிரோத சக்திகள் பாதுகாப்பாக இருப்பார்கள். ஆனால் பாஜக அதிலும் குறிப்பாக மோடி ஆட்சிக்கு வந்தால் தேச விரோத சக்திகள் நசுக்கப்படும். அதனால் வரும் தேர்தலில் காங்கிரஸை அகற்ற பாடுபடுவோம் என்றார்.
-
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications