நிபா வைரஸ்.. பீதி வேண்டாம்.. கோவை அரசு மருத்துவமனை வேண்டுகோள்!
நிபா வைரஸ் குறித்து பீதி வேண்டாம் என கோவை அரசு மருத்துவமனை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Recommended Video

கோவை: நிபா வைரஸ் நோய் குறித்து மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அசோகன் தெரிவித்து உள்ளார்.
கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டீன் அசோகன் மேலும் தெரிவித்ததாவது:
நிபா வைரஸ் நோய் குறித்து மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். கேரள எல்லையோரம் கோவை மாவட்டம் அமைந்து உள்ளதால், கேரள பகுதியில் இருந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை வரும் நோயாளிகளுக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் சுய மருத்துவம் மேற்கொள்ளாமல் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அசோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications