For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதிக்கு மெரினாவில் இடமில்லையா?.. கொதிக்கும் மக்கள்.. கொந்தளிக்கும் தொண்டர்கள்!

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய அனுமதி அளிக்காத தமிழக அரசுக்கு மக்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய அனுமதி அளிக்காத தமிழக அரசுக்கு மக்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

திமுக தலைவர் கருணாநிதி இயற்கை எய்தியுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

People opposing government decision against Karunanidhi tomb in Marina

95 வயதில் காலமானார் திமுக தலைவர் கருணாநிதி. இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.

மெரினா கடற்கரையில் உள்ள, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதி அளிக்க முடியாது என்று அரசு கூறியுள்ளது. காமராஜர் நினைவகத்தில் இடம் ஒதுக்க தயார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு நிலம் 2 ஏக்கரை கருணாநிதிக்கு நினைவிடம் ஒதுக்க தயார் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனால் தற்போது திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய அனுமதி அளிக்காத தமிழக அரசுக்கு மக்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். தமிழகம் முழுக்க திமுகவினர் மட்டுமில்லாமல் மக்கள் பெரிய அளவில் கொந்தளித்து போய் இருக்கிறார்கள்.

திமுகவின் முக்கிய தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள் மெரினாவில் புதைக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஏன் கருணாநிதிக்கு மட்டும் இப்படி என்று அரசுக்கு எதிராக கொந்தளித்து போய் இருக்கிறார்கள்.

English summary
People opposing the government decision against Karunanidhi tomb in Marina.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X