2வது நாளாக மின்சாரம் துண்டிப்பு- பால், குடிநீர் விலை உயர்வு- ஏடிஎம் முடக்கம் - தத்தளிக்கும் சென்னை!!
சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை 2- வது நாளாக முற்றிலும் முடங்கியுள்ளது. மழையின் காரணமாக அத்தியவாசிய பொருட்களின் விலை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மின்சாரம் துண்டிப்பு:
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நேற்று மதியம் முதல் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. துணை மின்நிலையங்களிலும் வெள்ளம் சூழ்ந்ததால் முற்றிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வேளச்சேரி, மடிப்பாக்கம், நங்கநல்லூர், கிண்டி, நந்தம்பாக்கம், சூளைமேடு, ராமபுரம், நுங்கம்பாக்கம், மேதா நகர், கில் நகர், போரூர், வடபழநி, கோட்டூர்புரம் மற்றும் புறநகர் பகுதிகள் இருளில் மூழ்கின.இதனால் மக்களின் வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

பால், தண்ணீர் விலை உயர்வு:
சென்னையில் இடைவிடாது பெய்து வரும் கனமழைக்கு பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன. பால், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரை லிட்டர் பால் விலை 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 50, 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 20 லிட்டர் தண்ணீர் கேன் சாதாரண நாட்களில் ரூ.30 க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது 75 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஏடிஎம் முடக்கம்:
சென்னை நகரின் பல பகுதிகளில் ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளன. பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகளின் ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் பலர் பணம் எடுக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

பெட்ரோல் தட்டுப்பாடு:
சென்னையில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவதிக்குள்ளாகியுள்ள மக்கள், தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயல்பு வாழ்க்கை 2-வது நாளாக முடக்கம்:
சென்னையில் தொடந்து பெய்த கனமழைக்கு நகரின் முக்கிய சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்த கனமழைக்கு ஏரி,குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அடையாறு, கூவம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் வீடுகளை விட்டு வெளியேறி மக்கள் நேற்று இரவு முழுவதும் உறக்கமின்றி ஆங்காங்கே சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சிலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இரண்டாவது நாளாக இன்றும் வெள்ள நீர் வடியாததால் உணவு ,மருந்து இல்லாமல் பலர் பெரும் சிரமத்தால் தவித்து வருகின்றன. இந்த நிலையில் இன்னும் 72 மணி நேரத்திற்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications