"குயில் 80 அற்புதம் 75".. சஷ்டியாப்தபூர்த்தியில் சத்யராஜுடன் பேரறிவாளன் குத்தாட்டம்.. வீடியோ
திருப்பத்தூர்: குயில்தாசன்- அற்புதம்மாள் தம்பதிக்கு 80ஆவது திருமண நாளையொட்டி நடந்த விழாவில் பேரறிவாளன் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பார்த்தசாரதி ரோட்டில் அமைந்துள்ள தனியார் திருமண வளாகத்தில் குயில் 80 அற்புதம் 75 என்ற தலைப்பில் பேரறிவாளன் தன்னுடைய தாய்க்கும் தந்தைக்கும் ஒரே மேடையில் பிறந்தநாள் விழா கொண்டாடினார்.
இதனைத் தொடர்ந்து பேரறிவாளன் தாயும் தந்தையும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டு கேக் வெட்டி ஊட்டிக் கொண்டனர். மேலும் அலங்காநல்லூர் சமர் பறை இசை குழுவினரின் இசை முழக்கம் நடைபெற்றது.

பேரறிவாளன்
அப்போது பேரறிவாளனும் திரைப்பட நடிகர் சத்யராஜும் மேடையில் நடனமாடிய நிகழ்ச்சி அனைவரையும் பரவசப்படுத்தியது. இதனை தொடர்ந்து குயில் 80 அற்புதம் 75 என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள் திரைப்பட பிரபலங்கள் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

30 ஆண்டுகள்
சுமார் 30 வருடங்களாக குடும்பத்தை பிரிந்திருந்த பேரறிவாளனின் ஒட்டுமொத்த ஆசையையும் நிறைவேற்றிக் கொண்டதாக இந்த விழா அமைந்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் 7 தமிழர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர்.

பேரறிவாளன் விடுதலை
இந்த நிலையில் பேரறிவாளனை இந்த வழக்கிலிருந்து உச்சநீதிமன்றம் தங்களுக்கு இருக்கும் விதியை கொண்டு விடுதலை செய்தது. பரோலில் இருந்த பேரறிவாளன் புழல் சிறைக்கு சென்று செயல்முறைகளை முடித்துக் கொண்டு விடுதலையானார். பேரறிவாளன் தனது விடுதலைக்கு தனது தாயுடன் குரல் கொடுத்த நபர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வந்தார்.

திருமணம்
இந்த நிலையில் பேரறிவாளனுக்கு திருமணம் நடத்தி வைக்க பெற்றோர் ஆசைப்பட்டு வரும் நிலையில் அவருக்கு பெண் பார்க்கும் படலம் தொடங்கிவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் தனது பெற்றோருக்கு 80 ஆவது திருமணம் (சஷ்டியாப்தபூர்த்தி) நடத்தி வைத்து பேரறிவாளன் மகிழ்ச்சி அடைந்தார்.

ஆசி பெற்ற பிரபலங்கள்
இந்த நிகழ்ச்சியில் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தருமபுரி எம்பி செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு குயில்தாசன்- அற்புதம்மாள் தம்பதியிடம் ஆசி பெற்றனர். இந்த நிகழ்ச்சியை சிறப்பிக்கும் விதமாக அலங்காநல்லூர் சமர் பறை இசை குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications