பேரறிவாளனுக்கு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப் பட்டு சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று சிகிச்சை அளிக்கப் பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சிறுநீர் தொற்று, முதுகுவலி, வயிறு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். வேலூர் அரசு மருத்துவமனையில் சிறுநீர் தொற்று பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லாததால், அவருக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சிறைத்துறை டிஐஜியிடம் மனு அளித்தார்.

அற்புதம்மாள் கோரிக்கையின் அடிப்படையில் பேரறிவாளன் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பின்னர் அவருக்கு இம்மாதம் 8ம் தேதி மற்றும் 11ம் தேதிகளில் சிறுநீரகத் தொற்று தொடர்பாக சோதனைகள் மேற்கொள்ளப் பட்டன. இம்மாதம் 13ம் தேதி அவருக்கு கண் பார்வை தொடர்பாக சோதனைகள் செய்யப் பட்டன.
இந்த சோதனைகளின் அடிப்படையில் இன்று காலை புழல் சிறையில் இருந்து, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப் பட்டு பேரறிவாளனுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications