சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பதவியேற்ற 2 மாதத்தில் வீரமரணமடைந்த பெரியபாண்டி!
சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பதவியேற்ற 2 மாதத்தில் பெரியபாண்டி வீரமரணமடைந்துள்ளார்.
Recommended Video

சென்னை: மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பதவியேற்ற 2 மாதத்தில் பெரியபாண்டி வீரமரணமடைந்துள்ளார்.
கொளத்தூர் லட்சுமிபுரத்தில் உள்ள நகைக்கடையில் மூன்றரை கிலோ தங்க நகைகள் கடந்த 16ஆம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளான நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோர் ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது.

வெள்ளிக்கிழமை புறப்பட்டனர்
இதையடுத்து தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க கடந்த வெள்ளிக்கிழமை அவசரமாக ராஜஸ்தான் புறப்பட்டனர். இன்று அதிகாலை பாலி மாவட்டத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர்.

இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை
அப்போது கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சென்னை மதுராவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்
பெரியபாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர்.

சென்னை கொண்டுவர..
காயமடைந்த போலீசாருக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை சென்னை கொண்டுவரும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

அக்டோபர் 10ல் பதவியேற்பு
இந்நிலையில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பெரியபாண்டி கடந்த 2000ஆம் ஆண்டில் தான் போலீஸ் பணியில் சேர்ந்துள்ளார். மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக கடந்த அக்டோபர் மாதம் 10 ஆம் தேதிதான் பதவியேற்றுள்ளார்.

2 மாதத்தில் வீரமரணம்
சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பதவியேற்று 2 மாதத்தில் வீரமரணமடைந்துள்ளார். நெல்லையை சேர்ந்த பெரியபாண்டி ஆவடியில் வசித்து வருகிறார்.

மனைவி மற்றும் மகன்கள்
அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். ஒரு மகன் லயோலா கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பும் மற்றொரு மகன் 9ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

போலீஸ் விசாரணை
வீரமரணமடைந்த வீரபாண்டியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் சென்னை கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சண்டை நடந்த பாலி மாவட்டம் ராம்வாஸ் கிராமத்தில் ராஜஸ்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications