ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரன் வேட்புமனுவை நிராகரிக்கக்கோரி தேர்தல் அதிகாரியிடம் மனு
சென்னை: ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி.தினகரனின் வேட்புமனுவை நிராகரிக்கக்கோரி தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தினகரன் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் வேட்புமனுவை ஏற்க கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா தரப்பு வேட்பாளராக டிடிவி.தினகரன் போட்டியிடுகிறார். இரட்டை இலையை முடக்கியுள்ள தேர்தல் ஆணையம் சசிகலா தரப்புக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து டிடிவி.தினகரன் ஆர்கே.நகர் தொகுதியில் தனது சின்னத்தை அடையளப்படுத்தும் வகையில் தொப்பியுடன் சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்நிலையில் அவரது வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பிரவீன் நாயரிடம் மனு
சென்னையை சேர்ந்த ஜோசப் என்பவர் தேர்தல் ஆணைய அதிகாரி பிரவீன் நாயரிடம் மனு அளித்துள்ளார். அதில் ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரன் வேட்புமனுவை நிராகரிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹைகோர்ட்டில் வழக்கு
டிடிவி தினகரன் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் வேட்புமனுவை ஏற்க கூடாது என்று ஜோசப் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஜோசப் சென்னை ஹைகோர்ட்டில் அண்மையில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

நிராகரிக்க வேண்டும்
அதில் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி. தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு கோர்ட்டு உத்தரவிட வேண்டும். வழக்கில் தொடர்பு இருந்தாலோ அல்லது வழக்கு நிலுவையில் இருந்தாலோ அல்லது அபராதம் விதிக்கப்பட்டாலோ தேர்தலில் போட்டியிடக் கூடாது என தடை விதிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் டி.டி.வி.தினகரனின் வேட்பு மனுவை ஏற்றுக் கொள்ள கூடாது எனவும் உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தேர்த்ல் ஆணையத்தை அணுக அறிவுறுத்தல்
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தையும் மத்திய அரசையும் தான் மனுதாரர் அணுக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில் தினகரனின் வேட்புமனுவை நிராகரிக்கக்கோரி ஜோசம் தேர்தல் ஆணைய அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications