வட்டச் செயலாளர் தேர்தலில் பயங்கரம்... திமுக கோஷ்டிகள் மோதல்... பெட்ரோல் குண்டு வீச்சு!
சென்னை: திமுக உட்கட்சிப் பூசல் தற்போது வெடிகுண்டு வீச்சு வரை போய் விட்டது. சென்னையில் நடந்த உட்கட்சித் தேர்தலின்போது இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திமுகவில் ஜனநாயக அடிப்படையில் உட்கட்சித் தேர்தல் நடந்தது. இதில் பல்வேறு கோஷ்டிப் பூசல் தலைவிரித்தாடுகிறது. பல இடங்களில் அடிதடி, மறியல், போராட்டம் என களை கட்டியுள்ளது.
வடசென்னை கிழக்கு மாவட்டம், திரு.வி.க. நகர் பகுதி 76வது வட்டத்தில் வட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் நடந்தது. தி.மு.க. உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களித்துக்கொண்டு இருந்தனர்.

காலை 11 மணியளவில் திடீரென்று வாக்குப்பதிவு மையத்தில் தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. அவர்கள் இரு தரப்பாக பிரிந்து மோதலில் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பன்னீர்செல்வம் என்பவர் தாக்கப்பட்டார். அவரது உடலில் ரத்தம் கொட்டியது. இதைத்தொடர்ந்து அவரை ஒரு தரப்பினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கோயம்பேட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அந்த பகுதிக்கான தி.மு.க. உட்கட்சி பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் தற்போது வட்ட செயலாளராக இருக்கும் குமரனை எதிர்த்து லோகு என்பவர் போட்டியிட்டார். அங்கே வாக்குப்பதிவு நடந்த இடத்தில் யாரோ பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. ஆனால் நல்லவேளையாக அந்த குண்டு வெடிக்கவில்லை. இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
சம்பவம் குறித்து அறிந்ததும் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தேர்தலும் நிறுத்தி வைக்கப்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக புகார் தெரிவித்ததால் போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு தரப்பினரும் சமாதானம் அடைந்தை தொடர்ந்து தேர்தல் நடத்தப்பட்டது.
உட்கட்சி தேர்தலில் மோதல் சம்பவங்கள் நடந்ததை தொடர்ந்து சென்னையில் பல இடங்களில் தி.மு.க. உட்கட்சி தேர்தலை கட்சியின் தலைமை நிறுத்தி வைத்தது. சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்கு பகுதியில் உள்ள 37வது வட்டம், தெற்கு பகுதியில் உள்ள 45வது வட்ட தேர்தல், திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள 119 வட்ட தி.மு.க. தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications