வீரர்களின் உயிருக்கு பவுன்சரால் ஆபத்து! இந்தியா-ஆஸி. தொடரை ரத்து செய்ய கோர்ட்டில் வழக்கு
மதுரை: பிலிப் ஹியூக்ஸ் மரணத்தையடுத்து இந்திய வீரர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளதால், அந்த கிரிக்கெட் தொடரை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரை சேர்ந்த கே.பிரவீன்குமார், ஹைகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஆஸ்திரேலியாவில் கடந்த நவம்பர் 25ம் தேதி நடந்த உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் பிலிப் ஹியூக்ஸ் (25) என்ற வீரர் பவுன்சர் பந்து வீச்சால் அடிபட்டு இறந்துள்ளார். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

கிரிக்கெட்டில் காயமடைவது சகஜம் என்றாலும், தற்போது ஆபத்து குறித்து விவாதங்கள் நடந்து வருகிறது. வீரர்கள் ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு கவசங்கள் அணிந்து தான் விளையாடுகின்றனர். இருந்தாலும் பவுன்சர் பந்து குறித்து கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய சூழலில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் குழு 3 மாத சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் விளையாடுவது உயிரை பணயம் வைத்து விளையாடுவதற்கு சமம்.
முன்னெச்சரிக்கையுடன் விளையாடினாலும் வீரர்கள் இறக்கும் நிலை உள்ளது. எனவே இதுபோன்றதொரு விளையாட்டு அவசியமா என்ற யோசனை எழுந்துள்ளது. எனவே, நீதிமன்றம் தலையிட்டு பிசிசிஐ வசம் உள்ள இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தை மத்திய அரசு ஏற்று நடத்தவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளை திறமையாகவும், நம்பிக்கை தரும் வகையில் நடத்தவும் உத்தரவிட வேண்டும்.
அதுவரை கிரிக்கெட் அணி வீரர்களின் உயிருக்கும், உடலுக்கும் முழு உத்தரவாதம் தரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். ஆஸ்திரேலியாவில் இந்திய அணி அட்டவணை வெளியிடப்பட்ட போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும். அங்கிருந்து இந்திய அணியை திரும்ப அழைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications