கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை அப்பல்லோவில் அனுமதி.. நள்ளிரவு முதல் தொடர் சிகிச்சை
Recommended Video

சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை அப்பல்லோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 11.55 மணிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று காலை அவர் தேனாம்பேட்டையிலுள்ள அப்பல்லோவின் சிறப்பு மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தொற்று நோய் சிகிச்சை
அங்கு தொற்றுநோய் பாதிப்பு தொடர்பாக பரிசோதனைகள் நடத்தப்பட்டு மீண்டும் கிரீம்ஸ் சாலை அப்பல்லோவிற்கு அவர் அழைத்து செல்லப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது.

அப்பல்லோ அறிக்கை
இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரனாயி விஜயன் வழக்கமாக செய்துகொள்ளும் சோதனைகள்தான் என்றும், நாளையே அவர் டிஸ்சார்ஜ் ஆக வாய்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேநேரம், ஏன் நள்ளிரவில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார் என்பதற்கான விளக்கம் அப்பல்லோ சார்பில் அளிக்கப்படவில்லை.

ஆறுதல் கூறிய முதல்வர்
கேரளாவில், அரிசி திருடியதாக குற்றம்சாட்டி, பழங்குடியின இளைஞன் மது என்பவர் அடித்தே கொலை செய்யப்பட்டார். நாடு முழுக்க இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று மது குடும்பத்தாரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறிய பினராயி விஜயன், கொலையாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

நள்ளிரவில் சிகிச்சைக்கு சேர்ப்பு
இதன்பிறகு, நள்ளிரவில், அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதே கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் சிகிச்சை பெற்றார், என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications