கடவுளே என்னிடம் இப்படி விளையாடாதீர்கள்!... அமெரிக்காவில் பொருட்களை பறிகொடுத்த பாடகி சின்மயி வேதனை

அமெரிக்காவில் இசைக்கச்சேரிகளில் பங்கேற்பதற்காக சென்ற பின்னணி பாடகி சின்மயியின் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல பின்னணி பாடகி சின்மயி அமெரிக்காவில் தன்னுடைய கார் கண்ணாடி உடைக்கப்பட்டு அனைத்து பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படப் பின்னணி பாடகி சின்மயி, ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்பு எனக்கு உனக்கு, பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டக்கோழி போன்ற பல தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ளார்.

பின்னணிப் பாடகி, வானொலித் தொகுப்பாளர், மொழிபெயர்ப்பாளர், வலைத்தளப் பயணர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் போன்ற பன்முகங்கள் கொண்டவர் சின்மயி. சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படும் சின்மயி சுச்சி லீக்சில் தன்னை பற்றிய அவதூறுகளை பதிவிட்டதற்காக பாடகி சுசித்ராவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அமெரிக்காவில் கச்சேரி

தனது சொந்த இசை ஆல்பம் தயாரிப்பிற்காகவும், இசைக்கச்சேரிகளில் பங்கேற்பதற்காகவும் சின்மயி அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் இன்று பிற்பகல் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் வணிக வளாகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த தன்னுடைய காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு கைப்பை, பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

 என்ன செய்வதென்றே தெரியவில்லை

என்ன செய்வதென்றே தெரியவில்லை

சின்மயி பதிவிட்டுள்ள மற்றொரு டுவீட்டில் " நான் சிதறிக் கிடக்கும் கார் கண்ணாடி துண்டுகளுக்கு அருகில் நிற்கிறேன், 5 நிமிடங்கள் என்ன செய்வதென்றே எனக்கு தெரியவில்லை. பிறகு தான் உள்ளே பார்த்தேன், காரில் இருந்த பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டுள்ளன. கடவுளே என்னிடம் ஏன் இப்படி விளையாடுகிறாய் என்றும் அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கிடைக்கும் என நம்பிக்கை

அதிர்ஷ்டவசமாக பொருட்களை கொள்ளையடித்தவரின் உருவம் அருகிலுள்ள சுற்றத்தார் ஒருவரின் வீட்டிலுள்ள கேமராவில் சிவப்புநிற தொப்பி அணிந்த பெண் பொரட்களை திருடும் காட்சி பதிவாகியுள்ளதாகவும்இதன் அடிப்பைடயில், திருடப்பட்ட பொருட்கள் திரும்பக் கிடைக்கும் என நம்புவதாகவும் சின்மயி கூறியுள்ளார். இங்கு இது போன்ற திருட்டு சம்பவங்கள் சர்வ சாதாரணம் என்று போலீசார் ஆறுதல் கூறியதாகவும் சின்மயி கூறியுள்ளார்.

 எஸ்.பிபியின் பொருட்களும் திருடு போனது

எஸ்.பிபியின் பொருட்களும் திருடு போனது

கடந்த மாதம் இதே போன்று அமெரிக்காவில் இசைப்பயணம் சென்றிருந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பாஸ்போர்ட், பணம் உள்ளிட்டவை அடங்கிய பையைத் தவறவிட்டுள்ளார். அதை யாரோ திருடிவிட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது. அதற்குப் பின்னர், இந்தியத் தூதரக அதிகாரிகளைச் சந்தித்து, எஸ்.பி.பி தனது பை திருடுபோனதாகத் தெரிவித்ததையடுத்து, தூதரக அதிகாரிகள் அவருக்கு தற்காலிக பாஸ்போர்ட் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+