சவுதியில் சிக்கித் தவிக்கும் கணவர்: மீட்டு தர இளம்பெண் கலெக்டரிடம் மனு
நெல்லை: சவுதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் தனது கணவரை மீட்டு தருமாறு இளம்பெண் ஒருவர் நெல்லை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவெட்டநல்லூரை சேர்ந்தவர் மணிகண்டன். அவரது மனைவி மாரிமுத்து. மாரிமுத்து தனது குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எங்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். மதுரையில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் ஒரு நிறுவனத்தினர் எனது கணவருக்கு சவுதி அரேபியாவில் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்தனர். அதனை நம்பி நாங்கள் அந்த நிறுவனத்திடம் ரூ.86 ஆயிரம் செலுத்தினோம். மேலும் சவுதி செல்ல விமான கட்டணமாக ரூ.25 ஆயிரமும் பெற்று கொண்டனர். அந்த நிறுவனம் அளித்த ஆவணங்களை வைத்து கொண்டு எனது கணவர் ஆகஸ்ட் மாதம் சவுதி சென்றார்.
ஆனால் அவருக்கு சவுதியில் குறிப்பிட்டபடி வேலை எதுவும் கொடுக்கவில்லை. இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள் என எனது கணவர் கெஞ்சியும் அவர்கள் அங்கு ஒரு அறையில் அவரை அடைத்து வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இது குறித்து நான் அந்த நிறுவனத்திடம் தகவல் கேட்டபோது அவர்கள் பதில் அளிக்க மறுக்கின்றனர்.
இது குறித்து நான் மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன். சம்பந்தப்பட்ட நிறுவனம் எனது கணவரிடம் 10 ஆயிரம் ரியால் செலுத்திவிட்டு போ என கூறுவதாக தெரிகிறது. எனது கணவரை மீட்டு தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications