சென்னை வந்த பிரதமர் மோடி.. புதிய விமான முனையம், வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்த உற்சாகம்! ஆஹா
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார். சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ரூ.2,467 கோடி மதிப்பிலான புதிய முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, சென்னை -கோவை வந்தே பாரத் ரயில் சேவையை பச்சைக்கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் புதிய திட்ட பணிகளை பிரமதர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து வருகிறார். அதன்படி பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்தில் இருந்து இன்று மதியம் தமிழ்நாடு வருவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஹைதராபாத்தில் பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் இன்று மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டார். மதியம் 2.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார்.

விமான முனையம் திறப்பு: விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர். அதன்பிறகு பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைத்தார். இந்த விழாவை முடித்து கொண்டு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதியம் 3.30 மணியளவில் புறப்பட்டு நேப்பியர் பாலம் அருகே ஐஎன்எஸ். அடையார் ஹெலிபேட் தளத்துக்கு சென்றார்.
வந்தே பாரத் ரயில் சேவை: அங்கிருந்து மதியம் 3.55 மணியளவில் கார் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார்.. அப்போது பாஜகவினர் சாலையோரம் நின்று உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர். பிரதமர் மோடியின் கார் மீது பூக்கள் தூவினர். இதில் மகிழ்ச்சியடைந்த பிரதமர் மோடி காரில் இருந்தபடியே கையசைத்தார். அதன்பிறகு சென்னை-கோவை 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ரயில் சேவை: பிறகு மாலை 4.25 மணியளவில் காரில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லம் புறப்பட்டு சென்றார். மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி ஒருமணிநேரம் வரை அங்கு இருப்பார். அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து காரில் பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்கிறார். தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையேயான 2 வழித்தட பயணிகள் ரயில் 2 வழித்தடங்களிலுமான பயணிகள் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். மேலும் நாகை மாவட்டத்தின் உப்பு ஏற்றுமதியை அதிகப்படுத்தும் வகையில் ரூ.294 கோடி மதிப்பிலான திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையேயான 37 கி.மீ. அகல ரயில்பாதை திட்டத்தை திறந்து வைக்கிறார்.

சாலை திட்டங்கள்: மதுரை- செட்டிகுளம் இடையே 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் (என்.எச்.785), நத்தம்-துவரங்குறிச்சி இடையேயான (என்.எச்.785) 4 வழிச்சாலை திட்டம் ஆகியவற்றை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். திருமங்கலம்-வடுகப்பட்டி இடையே (என்.எச்.744) 4 வழிச் சாலை திட்டத்துக்கும், வடுகப்பட்டி-தெற்கு வெங்கநல்லூர் (என்.எச்.744) இடையேயான 4 வழிச்சாலை திட்டத்துக்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார். ரூ.2 ஆயிரத்து 400 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தெப்பக்காடு வருகை: அதன்பிறகு சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 7.45 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.40 மணியளவில் கர்நாடக மாநிலம் மைசூரு சென்றடைகிறார். இரவு அங்கு தங்கும் பிரதமர் மோடி நாளை காலை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு நீலகிரி தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வருகிறார்.
பங்கேற்பாளர்கள்: முன்னதாக இன்றைய நிகழ்ச்சிகளில் ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், ஜோதிர்தியா சிந்தியா, எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் எவ வேலு, தாமோ அன்பரசன், எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications