“அன்பான அதிமுக நண்பர்களே..” திடீரென டோனை மாற்றிய அன்புமணி.. ஜெயலலிதா போட்டோவுடன் வந்து பரபர பேச்சு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் சி அன்புமணியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அன்புமணி ராமதாஸ், அதிமுகவினரும் தேமுதிகவினரும் கூட இந்தத் தேர்தலில் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். குறிப்பாக முன்னாள் முதல்வரும் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா படம் உள்ள பேனர்கள் அன்புமணி பிரச்சாரத்தில் பார்க்க முடிந்தது.
விக்கிரவாண்டி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர் திமுகவின் புகழேந்தி.. இவர் மரணமடைந்த நிலையில், அத்தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயாவும், பாமக சார்பில் சி.அன்புமணியும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா போட்டோ: அதேநேரம் இந்த இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கிடையே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அன்புமணிக்கு ஆதரவாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். குறிப்பாக முன்னாள் முதல்வரும் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா படங்கள் அன்புமணி பிரச்சார பேனர் மற்றும் போஸ்டர்களில் பார்க்க முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அன்புமணி: இதற்கிடையே இந்தக் கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமான தேர்தல்... மக்கள் உரிமைகளுக்காக நடக்கும் தேர்தல் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.. இந்தத் தேர்தல் நிச்சயமாக இந்த தேர்தலில் பாமக வெற்றி பெறும்.. அதில் சந்தேகம் இல்லை. இந்த இடைத்தேர்தலில் திமுக பணத்தை மட்டுமே நம்பி இருக்கிறது.. அவர்கள் 3 ஆண்டுகளில் செய்த சாதனையைச் சொல்லிக் கேட்கப் போவதில்லை.. ஏனென்றால் 3 ஆண்டுகளில் அவர்கள் எதையுமே செய்யவில்லை.
எவ்வளவு பணம் மூட்டைகள் வைத்திருந்தாலும் சரி இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற முடியாது.. பண மூட்டைகள் எடுத்து வந்தாலும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியும். பாமகவிற்கு வாக்களித்தால் மட்டுமே.. சமூக நீதி காக்கப்படும். இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் அமைச்சர்கள் பணம் கொடுப்பார்கள்.. ஆனால் தேர்தல் முடிந்தவுடன் கிளம்பிவிடுவார்கள். அதன் பிறகு அமைச்சர்களை நாம் பார்க்கவே முடியாது.
அதிமுக நண்பர்களே: இப்போது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்காகவும் தான் பாமக நிறுவனர் ராமதாஸ் போராடி வருகிறார். அன்பான அதிமுக நண்பர்களே.. உங்களுக்கு நான் ஒரே ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.. அதிமுக இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.. புறக்கணித்து இருக்கிறீர்கள். எனவே, பொது எதிரான திமுகவை வீழ்த்த அதிமுகவினர் இந்த இடைத்தேர்தலில் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
திமுகவை வீழ்த்த தேமுதிகவினரும் பாமகவுக்கு வாக்களிக்க வண்டும். இது சமூக நீதிக்கான தேர்தல். சரியாக வாக்களியுங்கள். விரைவில் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களும் இங்குப் பிரச்சாரத்திற்கு வர உள்ளனர்.
இட ஒதுக்கீடு: வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். இதைச் சாதி பிரச்சினை எனச் சுருக்கிவிடக்கூடாது.. வேலை வாய்ப்பு, கல்வியில் இடம் கொடுங்கள் என்று தான் கேட்கிறோம்.. கட்சியைப் பார்க்காமல் மாற்றுக்கட்சியினரும் கூட சமூக நீதியைக் காக்க இந்த இடைத்தேர்தலில் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
கோபம்: திமுக ஆட்சியில் எங்குப் பார்த்தாலும் சோதனை தான்.. தமிழ்நாடு முழுக்க மக்கள் வேதனையில் தான் உள்ளனர். இந்த இடைத்தேர்தல் நாம் யார் என்பதைக் காட்டும் தேர்தல்.. நீங்கள் அனைவரும் திமுக அரசுக்கு எதிராகக் கோபத்தில் இருக்கிறீர்கள் என்பது தெரியும். இந்த கோபத்தை நீங்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று பாமகவுக்கு வாக்களித்துக் காட்டுங்கள்" என்று அவர் தெரிவித்தார்.
-
“மாம்பழத்தை ஜூஸ் ஆக்கிவிடாதீர்கள்..” பாமக வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து! -
சசிகலா - ராமதாஸ் கூட்டணி வைத்தது எப்படி? இதற்கு இப்படி ஒரு பேர் வைக்க திட்டமா? அட போங்க! -
சீட் தரேன்.. யாராவது இருக்கீங்களா? தேடி தேடி ஆள் பிடிக்கும் ராமதாஸ்.. இப்படி ஒரு மோசமான நிலையா? -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications