டாக்டர் இப்படிச் செய்வார்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.. நீக்கப்பட்ட பாமக எம்.எல்.ஏ
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து விட்டு வந்ததற்காக தன்னை கட்சியிலிருந்து நீக்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று பாமக எம்.எல்.ஏ. கலையரசு கூறியுள்ளார்.
அணைக்கட்டுத் தொகுதி பாமக எம்.எல்.ஏ. கலையரசு, சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். தொகுதி சார்ந்த குறைகள், பணிகள் தொடர்பாக முதல்வரைச் சந்தித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
இதேபோலத்தான் தேமுதிகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியமும் முதல்வரைச் சந்தித்து விட்டு வந்தார்.
கலையரசுவின் செயலால் அதிர்ச்சி அடைந்த பாமக , அவரை உடனடியாக கட்சியை விட்டு நீக்கியது. பாமகவுக்கு இருந்த இந்த தைரியமும், துணிச்சலும் தேமுதிகவுக்கு இல்லை. அவர்கள், அருண் சுப்பிரமணியத்தின் கட்சிப் பதவியை மட்டுமே பிடுங்கியுள்ளனர். அவரை கட்சியை விட்டு நீக்கவில்லை.
இந்த நிலையில் பாமகவின் முடிவால் கலையரசு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், என் தொகுதியில் தாலுகா அலுவலகம் வேண்டும் என்று கேட்டிருந்தேன். அதன்படி முதல்வர் ஜெயலலிதா அமைத்துக் கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவிக்கவே அவரை நான் சத்தித்தேன். அப்போது அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தும் தெரிவித்துவிட்டு வந்தேன்.
ஆனால், என்னை பாமகவில் இருந்து நீக்கிவிட்டனர். இதைக் கேள்விபட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவாக செயல்படுவது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் கலையரசு.
கண்டிப்பாக அவர் பாமகவுக்கு ஆதரவாக செயல்பட முடியாது என்பது மட்டும் தெளிவு....
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications