மீனவர் சுட்டுக் கொல்வதே இலங்கைக்கு வேலை.. கோ.க மணி ஆவேசம்
ராமேஸ்வர மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து பாமக சார்பில் சென்னையில் பேரணி நடத்தப்பட்டது.
சென்னை: கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் நடுகடலில் சுட்டுக் கொன்றனர். இதனைக் கண்டித்து பாமக சார்பில் கண்டனம் தெரிவித்து பேரணி நடத்தப்பட்டது.
தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும் போது, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர். கடந்த 6ம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத் தீவிற்கும் நெடுந்தீவிற்கும் இடைப்பட்ட இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ பலியானர். சரோன் படுகாயத்துடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு வகையில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதே போன்று இன்று பாமக சார்பில் சென்னையில் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் முன்னாள் எம்எல்ஏ கோ.க. மணி தலைமை தாங்கி நடத்தினார்.
அப்போது, கோ.க. மணி செய்தியாளர்களிடம் பேசும் போது, தமிழக மீனவரை பாதுகாக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 800 மீனவர்கள் இதுவரை இலங்கை கடற்படையினர் கொன்றுள்ளனர் என்று கோ.க. மணி குற்றம்சாட்டினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications