For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாமகவின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு... டிச. 30ம் தேதி.. தைலாபுரத்தில்!

பா.ம.கவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் வரும் 30 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். ‘‘2016 ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2017 ஆம் ஆண்டை வரவேற்போம்’’ என்ற

Google Oneindia Tamil News

சென்னை: பா.ம.கவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் வரும் 30 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். ''2016 ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2017 ஆம் ஆண்டை வரவேற்போம்'' என்ற தலைப்பில் சிறப்பு பொதுக்குழு நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி விடுத்துள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு,''2016 ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2017 ஆம் ஆண்டை வரவேற்போம்'' என்ற தலைப்பில் வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

PMK's New Year Special General Meeting to be held on the 30th :G.K.Mani

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள மாங்கனி அரங்கில் வரும் 30&ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு இப்பொதுக்குழு நடைபெறவிருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்,

பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இந்த சிறப்புப் பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார். கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் கல்ந்துகொள்ள உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இப்பொதுக்குழு கூட்டத்தில் பாராட்டு செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜிகே மணி தெரிவித்துள்ளார்.

English summary
PMK's Leader GK.Mani has announced that New Year Special General Meeting of PMK to be held on the 30th.He said the meeting will be held In the title of '' Lets say bye to 2016 and Lets welcome the year 2017''
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X