புகையிலை கட்டுப்பாட்டு சட்டம் வலியுறுத்தி 10 லட்சம் கையெழுத்து: பாமக
Subscribe to Oneindia Tamil
சென்னை: புகையிலை கட்டுப்பாட்டு சட்ட மசோதாவை சட்டமாக்க கோரி, பத்து லட்சம் கையெழுத்து இயக்கத்தை பாமகவின் பசுமை தாயகம் அமைப்பு நாளை நடத்துகிறது.
மே 31ம் தேதி, உலக புகையிலை ஒழிப்பு நாளாக அனுசரிக்கபடுகிது. இதையொட்டி, பசுமை தாயகம் அமைப்பு, நாளை 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை நடத்துகிறது.

புகையிலைக் கட்டுப்பாட்டு சட்ட மசோதாவை சட்டமாக்க கோரி, இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. நாளை காலை 10 மணிக்கு, சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே பாமக எம்.பி, அன்புமணி ராமதாஸ், கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைக்கிறார்.












Click it and Unblock the Notifications