சென்னை கலவரம்: மேலும் 4 பேரை கைது செய்தது போலீஸ்
சென்னையில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அரசுப் பேருந்தை தாக்கி சேதப்படுத்தியதாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னையில் அரங்கேறிய வன்முறையின் போது அரசுப பேருந்தை சேதப்படுத்தியதாக 4 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த 4 பேரையும் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது கடந்த 23 ஆம் தேதி அதிகாலை காவல்துறையினர் திடீர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

சென்னை மெரினாவில் இளைஞர்களை ஓட ஓட விரட்டி காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தினர். இதனால் சென்னை மாநகரின் பல இடங்களில் வன்முறை வெடித்தது.
ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. குடிசைகள் மற்றும் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பல இடங்களில் சாலை மறியல்கள் நடைபெற்றன. இந்நிலையில் இந்த வன்முறை தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராயபுரம் மேம்பாலத்தில் 23ம் தேதி அரசுப் பேருந்தை தாக்கி சேதப்படுத்தியதாக 4 பேர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கருணாகரன், செல்வகுமார், ராஜ்குமார், ஜெய்சந்தர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications