For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவண்ணாமலை காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது பரபரப்பு புகார்

திராவிட இயக்கத்தலைவர்களை கொச்சைப்படுத்துவதாக எச்.ராஜா மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    அவதூறாக பேசுவதாக எச்.ராஜா மீது திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார்

    திருவண்ணாமலை: திராவிட இயக்கத் தலைவர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருவதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு, கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து எழுதிய கட்டுரையில், ஆண்டாளைப் பற்றி தவறான கருத்துகள் உள்ளதாக பிரச்னை எழுந்தது. இதற்கு வைரமுத்து மன்னிப்பு கேட்ட பிறகும் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா அவரை கடுமையாக தாக்கி பேசினார்.

    வைரமுத்து கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதை போலவே, எச்.ராஜா பேச்சுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

     வைரமுத்து மீது புகார்

    வைரமுத்து மீது புகார்

    இதனையடுத்து இந்து அமைப்புகளும், பிராமண அமைப்புகளும் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தமிழகத்தின் சில இடங்களில் வைரமுத்து மீது காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். காவல்துறையில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

     இறையாண்மைக்கு எதிரானது

    இறையாண்மைக்கு எதிரானது

    இந்நிலையில் திருவண்ணாமலை நகரை சேர்ந்த வழக்கறிஞர் சீனுவாசன், எச்.ராஜா மீது திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில், எச்.ராஜாவின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், நாட்டில் கலவரத்தை தூண்டும் வகையிலும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    மதக்கலவரம்

    மதக்கலவரம்

    மேலும், மக்கள் பெரும் மதிப்பு வைத்திருக்கும் திராவிட இயக்க தலைவர்கள் பற்றி கொச்சைப்படுத்தும் வகையிலும், கண்டிக்கதக்க வகையிலும் பேசுகிறார். இவரின் பேச்சு நாட்டில் மதக்கலவரம் வருமோ என அச்சப்பட வைக்கிறது. அதனால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த புகாரில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    தயக்கம்

    தயக்கம்

    இந்த புகாரை வாங்குவதா வேண்டாமா என காவல்நிலையத்தில் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவின் பேரில், புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், அதற்கு அத்தாட்சியாக சி.எஸ்.ஆர் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    English summary
    Case filed on BJP National Secretary HRaja in Thiruvannamalai for criticizing Dravidian Party Leaders Badly on Vairamuthu Issue. Earlier case filed on Vairamuthu for his writtings on Lord Andal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X