சசிபெருமாள் உடலை நாகர்கோவில் கொண்டு செல்ல எதிர்ப்பு: பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலை நாகர்கோவிலுக்குக் கொண்டு செல்ல எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். சசிபெருமாளின் உடலை நாகர்கோவிலுக்கு போலீசார் கொண்டு சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை என்ற கிராமத்தில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த டாஸ்மார்க் கடை கோயில், பள்ளி இருக்கும் பகுதியில் அமைந்துள்ளதால் அதனை அகற்றக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் அந்த ஊர் மக்களுடன் கடந்த ஆண்டு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும், உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன் தலைமையில் அந்த ஊர் மக்களும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, டாஸ்மாக் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதிமொழி அளித்துள்ளனர். இதனால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.
ஆனால், அதிகாரிகள் அளித்த உறுதிமொழிபடி டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. தொடர்ந்து டாஸ்மாக் கடையை தமிழக அரசு நடத்தி வந்தது.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் டாஸ்மாக் கடையை தமிழக அரசு அகற்றவில்லை. இதனால் மீண்டும் ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சசிபெருமாளும் போராட்டத்தில் குதித்தார். அப்போது, ஜூலை 31ஆம் தேதிக்குள் டாஸ்மாக் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் மீண்டும் உறுதி அளித்தனர். ஆனால், 31ஆம் தேதியான இன்று டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை.
இந்நிலையில், காந்தியவாதி சசிபெருமாள் மற்றும் உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன் தலைமையில் ஊர்மக்கள் இன்று போராட்டத்தில் குவித்தனர். அப்போது, மண்எண்ணெய் மற்றும் தீப்பெட்டியுடன் காலை 9.30 மணிக்கு சசிபெருமாள் செல்போன் டவரில் ஏறினார். அவரைத் தொடர்ந்து பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலனும் டவரில் ஏறினார். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் ஜெயசீலன் டவரில் இருந்து கீழே இறங்கிவிட்டார். ஆனால், சசிபெருமாள் மட்டும் டவரில் இருந்துள்ளார்.
சுமார் ஐந்தரை மணி நேரம் டவரில் இந்த அவரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ஐந்தரை மணிநேரம் போராட்டம் நடத்திய சசிபெருமாள் அங்கேயே மயங்கி சரிந்தார். இதனையடுத்து மேலே ஏறிய தீயணைப்புத்துறையினர் சசிபெருமாளை காவல்துறையினர் மீட்டனர். அப்போது, சசிபெருமாள் ரத்த வாந்தி எடுத்ததாக தெரிகிறது. அவர் சட்டையில் ரத்தக்கறை படிந்திருந்தது. உடனடியாக சசிபெருமாள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோரித்த மருத்துவர்கள் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மரணமல்ல கொலை
இதனிடையே சசிபெருமாளின் மரணம் இயற்கையானதல்ல கொலை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். சசிபெருமாள் உடலை நாகர்கோவில் எடுத்துச் செல்ல பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களை தடியடி நடத்தி கலைத்த போலீசார், சசிபெருமாள் உடலை நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் போரட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், நடவடிக்கை எடுக்கும் வரை உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். மேலும் 5 மணி நேரமாக போராடியவரை மீட்க நடவடிக்ககை எடுக்காதது ஏன்? என மக்கள் கேள்வி எழுப்பிய போலீஸ் மற்றும் வருவாய் துறையினரின் போக்கே சசிபெருமாள் உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications