"பட்ரோல்" வண்டியிலேயே பெட்ரோலை “ஆட்டையை” போட்ட போலீஸ்காரர்!
சென்னை: சென்னை போலீஸ் ரோந்து வாகனத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரே பெட்ரோல் திருடிய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் ரோந்து வாகனம் ஒன்றில் அடிக்கடி பெட்ரோல் திருடப்பட்டு வந்துள்ளது.
அந்த வாகனத்தின் டிரைவரான போலீஸ்காரரே பெட்ரோலை திருடுவதாக குற்றம் சாட்டப்பட்டாலும் அவர் கையும் களவுமாக பிடிபடாமல் இருந்தார்.

டிரைவர் இல்லாத வாகனம்:
இந்நிலையில் குறிப்பிட்ட போலீஸ் ரோந்து வாகனம் ஆயிரம் விளக்கு போலீஸ் குடியிருப்பு அருகில் நின்று கொண்டிருந்தது. ஆனால் டிரைவர் இருக்கையில் இல்லை.
சந்தேகம் அடைந்த போலீசார்:
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் குடும்பத்தைச் சேர்ந்த சிலர், இதுபற்றி ஆயிரம் விளக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.
பெட்ரோல் திருடிய காவலர்:
அப்போது ரோந்து வாகனத்தின் டிரைவரான போலீஸ்காரர், அதன் அருகில் அமர்ந்து பெட்ரோல் திருடிக்கொண்டிருந்தார். அவரை மடக்கிப் பிடித்த போலீசார் ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட அந்த போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த வீட்டையே கொளுத்திய கதையாக, போலீஸ் வண்டியிலேயே காவலர் பெட்ரோல் திருடிய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications