கொலை வழக்கில் கைதான பெண்ணிடம் போலீஸ் அத்துமீறல் - விசாரணைக்கு ஹைகோர்ட் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவரை 7 போலீஸ் அதிகாரிகள் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நாராயணன் வீதியைச் சேர்ந்தவர் லீலாவதி.

இவர் கடந்த 9 ஆம் தேதி லீலாவதி என்பவரது வீட்டில் கொலை செய்யப்பட்டார்.

வாடகைப் பெண் கைது:

இதுதொடர்பாக அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த மதுரை மேலூரைச் சேர்ந்த 45 வயது பெண்ணை உடுமலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

மகள் கோர்ட்டில் மனு:

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பெண்ணின் மகள் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

போலீசாரல் சித்ரவதை:

அதில், "லீலாவதி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட எனது தாயார் உடுமலை போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த போது 7 போலீஸ்காரர்களால் மானபங்கம் மற்றும் பாலியல் ரீதியான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்.

நடவடிக்கை தேவை:

சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மிக முக்கிய குற்றச்சாட்டுகள்:

இந்த மனு நீதிபதி ராமசுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவில் மிக முக்கியமான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளது.

முதன்மை நீதிபதி விசாரணை:

இதுதொடர்பாக கோவை முதன்மை மாவட்ட நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்படும் நீதிபதி ஒருவரும், அரசு பெண் மருத்துவரும்பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும்.

இடைக்கால தடைவிதிப்பு:

விசாரணை அறிக்கையை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் உடுமலையில் நடைபெறும் கொலை வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.

மீண்டும் மனுதாக்கல்:

ஹைகோர்ட் உத்தரவை தொடர்ந்து கோவை முதன்மை மாவட்ட நீதிபதி சேஷசாயி முன்னிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்தக்கோரி மனு தாக்கல் செய்யபட்டது. அத்துடன் ஹைகோர்ட் உத்தரவும் சமர்ப்பிக்கப்பட்டது.

நீதிபதி உத்தரவு:

மனு மீது விசாரணை மேற்கொண்ட மாவட்ட நீதிபதி இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு நீதிபதி தீபாவுக்கு உத்தரவிட்டார்.

மருத்துவப் பரிசோதனை:

நீதிபதி உத்தரவைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த பெண்ணிடம் நீதிபதி தீபா, அரசு பெண் மருத்துவருடன் சென்று விசாரணை நடத்தினார். மேலும் அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

பரபரப்பான குற்றச்சாட்டு:

அடுத்த மாதம் 3 ஆம் தேதி இந்த அறிக்கை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்படுகிறது. உடுமலை போலீஸ் நிலையத்தில் பெண் கைதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+