அழகிரியின் நெருங்கிய நண்பர் எஸ்.ஆர். கோபி பண்ணை வீட்டில் ரெய்டு: பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மு.க. அழகிரியின் நெருங்கிய நண்பரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எஸ்.ஆர்.கோபியின் பண்ணை வீட்டில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தி பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

திமுகவில் இருந்து தற்காலிமாக நீக்கப்பட்ட மு.க. அழகிரியின் 63வது பிறந்தநாள் நேற்று மதுரையே அதிரும் அளவுக்கு கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சுமார் 4 ஆயிரம் ஆதரவாளர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

sr gopi

அழகிரியின் 63வது பிறந்தநாளையொட்டி அவர் 63 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக்கை வெட்டினார். இப்படி கோலாகலமாக நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் அழகிரியின் நண்பரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எஸ்.ஆர்.கோபி.

மதுரை புறநகர் பகுதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அது எஸ்.ஆர். கோபியின் கார் என்பது தெரிய வந்தது. காரை கோபியின் பணியாளர் முருகேசன் ஓட்டி வந்தார். காரை சோதனையிட்டபோது அதில் துப்பாக்கி மற்றும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதற்கான ஆதாரங்களும் இருந்தன.

இந்நிலையில் எஸ்.ஆர். கோபியின் வீட்டில் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை 20க்கும் மேற்பட்ட போலீசார் மதுரை அவனியாபுரத்தில் இருக்கும் கோபிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையில்போது கோபியின் வீட்டில் உள்ள ஒரு அறையில் துப்பாக்கி, அரிவாள், வேல்கத்தி போன்ற ஆயுதங்கள், வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் பணம் எண்ணும் இயந்திரம் உள்ளிட்டவை இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த 3 கார்கள் மற்றும் 2 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஒரு கார் விபத்து நடந்த நிலையில் நின்றுள்ளது.

Police raid Azhagiri's close friend's farm in Madurai

மற்றொரு பண்ணை வீட்டில் சோதனை நடத்த போலீசார் செல்வதற்குள் கோபியின் வழக்கறிஞர்கள் 4 பேர் வந்து சோதனை செய்ய வாரண்ட் உள்ளதா என்று கேட்டு தகராறு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் அந்த வீட்டிலும் சோதனை நடத்தியபோது அந்த 4 வழக்கறிஞர்களும் உடன் சென்றனர். இதற்கிடையே கோபி, தனது கூட்டாளிகள் சிலருடன் தலைமறைவாகிவிட்டார். பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்ததற்காக கோபி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

<center><img style="-webkit-user-select:none;border:0px;" border="0" width="100%" height="1" src="http://web.ventunotech.com/beacon/vtpixpc.gif?pid=2&pixelfrom=jp" /><div id="vnVideoPlayerContent"></div><script>var ven_video_key="NTI0MjI5fHwyfHwxfHwxLDIsMQ==";var ven_width="100%";var ven_height="417";</script><script type="text/javascript" src="http://web.ventunotech.com/plugins/cntplayer/ventuno_player.js"></script></center>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+