3 பிரிவுகள்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு.. காரணம் இதுதான்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தடையை மீறி ஊர்வலம் சென்றதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் பாஜகவை பலப்படுத்தும் விதமாக அண்ணாமலை மக்களை சந்தித்து வருகிறார். அதிமுக இனி பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என்று தெரிவித்துள்ளதால் பாஜகவும் வரும் மக்களவை தேர்தலில் தனியாக ஒரு கூட்டணி அமைக்க ஆயத்தமாகி வருகிறது. தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. தனது பாத யாத்திரையில் அண்ணாமலை தமிழகத்தில் ஆளும் திமுகவை மிகக் கடுமையாக அட்டாக் செய்து வருகிறார்.

இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தடையை மீறி ஊர்வலம் சென்றதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருப்பத்தூர் மாவட்டத்தில் என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்டார். அப்போது புதுப்பேட்டை கூட்டு ரோடு சாலையில், அவரது நடைபயணத்தின் போது கொடிக்கம்பம் கீழே விழுந்தது.
இதில் கனில் என்பவர் படுகாயம் அடைந்தார். தொடந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது இது தொடர்பாக பாஜக நிர்வாகி சண்முகம் என்பவர் மீது திருப்பத்தூர் மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், கடந்த 2 ஆம் தேதி திருப்பத்தூர் ஆம்பூர் பகுதியில் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டார்.
இதில் நேதாஜி ரோடு பகுதியில் நடைபயணம் மேற்கொள்ள முயன்றபோது, முன் நடந்த அசம்பாவிதம் ஏது நடந்துவிடக்கூடாது என்பதற்காகவும், அந்த பகுதி மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதாலும், போலீசார் அண்ணாமலையின் ஊர்வலத்திற்கு அப்பகுதியில் தடை விதித்து இருந்தனர். ஆனால் அந்த தடையை மீறி பாஜகவினர் ஊர்வலம் மேற்கொள்வோம் என்று தெரிவித்து நடைபயணம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் தற்போது பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பொதுமக்களுக்கு இடையூறாக அளித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் ஆம்பூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications