நெல்லையில் தனியார் கல்லூரி பேராசிரியர் கொலை.. குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை
நெல்லை பேராசிரியர் கொலையில் ராக்கெட் ராஜா உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Recommended Video

நெல்லை: நெல்லை பேராசிரியர் கொலையில் ராக்கெட் ராஜா உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளம் பகுதியை சேர்ந்தவர் குமார். முதலில் புதிய தமிழகம் கட்சியில் இருந்தவர் பி்ன்னர் அதிலிருந்து விலகி தற்போது அதிமுகவில் இருந்தார். பாளையில் தங்கி ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.

இவரின் மகள் அனுசுயாவை விளாத்திகுளத்தை சேர்ந்த செந்தில்குமாருக்கு திருமணம் செய்து கொடுத்தார். மேலும் நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். பாளை விஎம் சத்திரத்தில் ஒரு இடத்தை வாங்கி விற்பது தொடர்பாக அவருக்கும், சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அந்த இடம் 5 பேருக்கு சொந்தமானது என்றும் அதை தனக்கு 3 பேர் எழுதி கொடுத்திருப்பதாகவும் கூறி வந்துள்ளார். இதை தொடர்ந்து நெல்லையை சேர்ந்த வக்கீல் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது.
ஆனால் குமார் இடத்தை விட்டு கொடுக்க மறுத்து விட்டார். இதையடுத்து எதிர் தரப்பினர் அவரை மிரட்டினர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டு முன்பு பேசி கொண்டிருந்த போது காரில் வந்த மர்ம கும்பல் அவரை வெட்டுதவற்கு பதிலாக அவரது மருமகன் செந்தில்குமாரை வெட்டி கொன்று விட்டு தப்பி சென்றது.
இது தொடர்பாக ஹைகிரவுண்ட் இன்ஸ்பெக்டர் பத்மாவதி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் ராஜசேகர், அஸ்வின் ஆகியோர் பாளை போலீசில் சரண் அடைந்தனர். இதில் ராக்கெட் ராஜா உள்பட 9 பேர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளதால் அவர்கள் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications