உடைந்து விழுந்த திருச்சி கொள்ளிடம் பழைய பாலம்: பொதுமக்கள் அருகே செல்ல வேண்டாம்.. போலீஸ் எச்சரிக்கை
உடைந்து விழுந்த திருச்சி கொள்ளிடம் பழைய பாலம் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
Recommended Video

திருச்சி: உடைந்து விழுந்த திருச்சி கொள்ளிடம் பழைய பாலம் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்தது. திருச்சி கொள்ளிடம் பழைய பாலத்தின் 18வது தூண் முற்றிலும் இடிந்து விழுந்த நிலையில் நேற்று 20வது தூணும் இடிந்து விழுந்து பாலம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் -டோல்கேட் பகுதியை இணைக்கும் விதமாக கொள்ளிடம் ஆற்றின் மீது ஆங்கிலேயர் காலத்தில் இரும்பு பாலம் கட்டப்பட்டது. 1928 முதல் இது பயன்பாட்டிற்கு வந்தது.
இந்த பாலத்தின் அருகிலேயே 77 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய நான்குவழிச்சாலை பாலம் கட்டப்பட்டு கடந்த 2016ம் ஆண்டில் திறக்கப்பட்டது. இதன் காரணமாக இரும்பு பாலம் முற்றிலுமாக கைவிடப்பட்டது.
கடந்த சில நாட்களாக வெள்ளத்தின் வேகம் அதிகரித்துள்ளதால், இரும்பு பாலத்தின் தூணில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் அதிகரித்துக் கொண்டே இருந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்தது.
இந்நிலையில் ஆர்ப்பரித்து செல்லும் நீரையும் இடிந்து விழுந்த பழைய இரும்பு பாலத்தையும் காண அப்பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டு வருகின்றனர். நீரின் வேகம் அதிகமாக உள்ளதால் எந்த நேரத்திலும் பாலம் இடிந்து விழலாம் என்பதால் பொதுமக்கள் பாலத்தின் அருகே செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
அதே நேரத்தில் போலீசார் மற்றும் அரசின் அலட்சியமே பாலம் இடிந்து விழ காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசு முறையாக பராமரித்திருந்தால் பாலம் நன்றாக இருந்திருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications