ஒரு வீடு... ஒரு பெண்.. உள்ளே ஒரு ஆண்.. வெளியே ஒரு வாலிபர்.. கட்டிப்புரண்டு சண்டை.. போலீஸ் வார்னிங்!

கன்னியாகுமரியில் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது தொடர்பாக இரு வாலிபர்களிடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் அப்பெண்ணின் வீட்டுக்கு வெளியே கட்டிப்புரண்டு சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்க இரு வாலிபர்களிடையே சண்டை மூண்டு இருவரும் நடு ரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் வந்து இரு வாலிபர்களையும் அடித்து விரட்டினர். அந்தப் பெண்ணையும் எச்சரித்துச் சென்றனர்.

கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் மஞ்சு (பெயர் மாற்றப்பட்டது). இவரது வீட்டுக்கு அடிக்கடி ஆண்கள் நடமாட்டம் இருந்து வந்தது. வீட்டில் மஞ்சு மட்டும் தனியாக வசித்து வருகிறார். இதனால் அப்பகுதி மக்கள் மஞ்சு மீது சந்தேகமடைந்தனர்.

இதையடுத்து விசாரித்தபோது அவர் குறித் சந்தேகம் மக்களுக்கு உறுதியானது. இதையடுத்து அவரைக் கூப்பிட்டு இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்துள்ளனர். இல்லாவிட்டால் போலீஸில் புகார் கொடுப்போம் என்றும் கூறினர். இதனால் ஆண்களை வீட்டுக்கு வரவழைப்பதை நிறுத்தினார் மஞ்சு.

மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும்

ஆனால் சமீப நாட்களாக மீண்டும் ஆண்கள் நடமாட்டம் தொடங்கியது. இதனால் அக்கம் பக்கத்தில் வசித்து வருவோர் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை ஒரு பைக்கில் வாலிபர் ஒருவர் மஞ்சுவின் வீட்டுக்கு வந்தார். பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு மஞ்சு வீட்டுக் கதவைத் தட்டினார்.

வெளியே வந்த வாலிபர்

வெளியே வந்த வாலிபர்

நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. அதன் பின்னர் கதவு திறக்கப்பட்டது. ஆனால் வாலிபர் ஒருவர் வந்து கதவைத் திறந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பைக் நபர், மஞ்சு எங்கே என்று கேட்டார். இதைத் தொடர்ந்து இரு வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கட்டிப்புரண்டு சண்டை

கட்டிப்புரண்டு சண்டை

அது பின்னர் அடிதடியாக மாறியது. இருவரும் அடித்துக் கொண்டு தெருவில் வைத்து சண்டையில் இறங்கினர். இதைப் பார்த்து திரண்ட மக்கள் இருவரையும் விலக்கி விட்டு பிடித்து வைத்தனர். போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

விரைந்து வந்த போலீஸார் விசாரணை நடத்தியபோது கதவைத் திறந்த நபர் மஞ்சுவிடம் உல்லாசமாக இருந்ததும், கதவைத் தட்டிய நபர் உல்லாசமாக இருக்க வந்தவர் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் அடித்து போலீஸார் இனிமேல் இந்தப் பக்கம் வரக் கூடாது என்று விரட்டி விட்டனர். மேலும் மஞ்சுவிடமும் இனிமேல் ஒழுங்காக இருக்குமாறு எச்சரித்து விட்டுச் சென்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+