தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்.. ஆர்வம் காட்டிய மக்கள்
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. 5 வயதுக்கு உள்பட்ட 70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயித்து வழங்கப்பட்டது.
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள்,சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43 ஆயிரத்து 51இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது,

இந்த மையங்கள் மூலம் சுமார் 70.50லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. காலை 7 தொடங்கி சொட்டு மருந்து முகாம் மாலை 5 வரை செயல்பட்டது. ஏற்கனவே எத்தனை முறை கொடுத்திருந்தாலும் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட்ட து.
போலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலம் தமிழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பு இல்லாமல் பாதுகாக்க போலியோ சொட்ட மருந்து வழங்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.












Click it and Unblock the Notifications