பொள்ளாச்சி பாலியல் வன்முறை குற்றவாளி - ஏற்கனவே பாதிக்கப்பட்ட சிறுமியைத் தேடும் பணியில் போலீஸ்
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நடைபெற்ற இரண்டு மாணவிகளின் பாலியல் வன்முறையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. குற்றவாளி வீராசாமி ஏற்கனவே ஒரு சிறுமியை பலாத்காரம் செய்த விவரம் தெரியவந்துள்ளது.
பொள்ளாச்சி டி.இ.எல்.சி ஆதரவற்றோர் மாணவ- மாணவிகள் விடுதியில் இருந்து கடத்தப்பட்ட 10 மற்றும் 11 வயதான 2 மாணவிகள் கடந்த 11 ஆம் தேதி அன்று இரவு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக வீராசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விடுதி மாணவிகள் பாலியல் பலாத்காரம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்த போது அடுக்கடுக்காக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த குற்றங்கள் மட்டும் அல்லாமல் பஸ் நிலையப் பகுதியில் பிச்சை எடுக்கும் தொழில் செய்யும் சிறு பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவதையே இவர் பொழுதுபோக்காக வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு பக்ரீத் பண்டிகையின் போது பொள்ளாச்சி பெரிய பள்ளிவாசல் முன்பு ஒரு பெண் தனது 8 வயது மகளுடன் படுத்திருந்திருக்கின்றார்.
அப்போது அங்கு வந்த வீராசாமி அந்த சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதைப்பார்த்த சிறுமியின் தாயார் சத்தம் போட்டு ஊரைக் கூட்டி உள்ளார்.
அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து வீராசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்துள்ளனர்.இந்த சம்பவத்தின் போது வீராசாமியின் சட்டைப்பையில் இருந்த ஒரு செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அது பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் ஒரு பயணியிடம் திருடப்பட்டது என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்ததோடு விட்டு விட்டனர்.
இந்த சம்பவத்துக்கு பின்னர் வீராசாமியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியும், அவளது தாயாரும் அங்கிருந்து சென்று விட்டனர். அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை.
இந்த நிலையில் விடுதி மாணவிகள் பலாத்கார வழக்கில் வலுகூட்டுவதற்காக வீராசாமியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை போலீசார் தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.
சிறுமியும், அவளது தாயும் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மூலம் வீராசாமியை அடையாளம் காட்டுவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications