பொன் அறச்சாலை அம்மனுக்கு தேர் திருவிழா… பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்: வீடியோ

பொன் அறச்சாலை அம்மன் கோயில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழியில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: பொன் அறச்சாலை அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஆயிரம் கணக்கான பக்தர்கள் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை பூர்த்தி செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் படை வெட்டும் பத்ரகாளி என்னும் பொன் அறச்சாலை அம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Pon Arasalai Amman temple car festival

கடந்த 18ம் தேதி பூச்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து தினசரி பல்வேறு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடந்தன. தினந்தோறும் சிறப்பு ஆராதனைகளும், பூஜைகளும் நடத்தப்பட்டு வந்தன.

இதனைத் தொடர்ந்து கோவிலின் முன்பு குண்டம் அமைத்து விறகுகள் எரிக்கப்பட்டு பக்தர்கள் இறங்கும் பூக்குழி தயார் செய்யப்பட்டன. குண்டம் தயாரானதும், தலைமை பூசாரி குண்டத்தில் இறங்கி நடந்து சென்றார். பின்னர், பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.

இந்தத் திருவிழா வருகிற 5ம் தேதி காலை மஞ்சள் அபிஷேகமும், மாலையில் மஞ்சள் நீராட்டு விழாவும் செய்யப்பட்டு, 6ம் தேதி மறுபூஜையுடன் விழா முடிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+