தூத்துக்குடியில் 13 பேர் மரணத்திற்கு காரணமே தி.மு.க.தான்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
13 பேர் மரணத்திற்கு திமுகதான் காரணம் என பொன்.ராதா தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்: தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் பலியானதற்கு தி.மு.க.தான் காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் சட்டசபையில் ஆளும் கட்சியை தி.மு.க. கேள்வி கேட்காமல் வெறும் வெளிநடப்பு மட்டுமே செய்வதாகவும் சாடியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது-

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மீனவ சகோதரர்கள் போராட்டத்தினை திசை திருப்பக்கூடிய அளவிற்கு மக்கள் அதிகாரம் அமைப்பு செயல்பட்டது. இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகள் தமிழகத்தில் செயல்படுவதாக நான் பலமுறை குற்றம் சாட்டி வருகிறேன். இப்போது அது வெளிவந்துள்ளது. இந்த அமைப்பை தடை செய்வதோடு மட்டுமல்ல, வேரோடு அகற்ற வேண்டும்.
தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் பலியானதற்கு தி.மு.க.வும் காரணம். சட்டசபையில் ஆளும் கட்சியை தி.மு.க. கேள்வி கேட்காமல் வெளிநடப்பு மட்டுமே செய்கின்றனர். உள்ளாட்சி தேர்தலை ஏன் நடத்தவில்லை என இதுவரை ஒரு கேள்வி கூட எழுப்பவில்லை. இதனால் இரு கட்சிகளுக்கும் மறைமுக கூட்டணி இருக்குமோ என சந்தேகமாக உள்ளது.
டெல்லியில் 16 வழிச்சாலை அமைக்கப்பட்டபோது எந்தவித எதிர்ப்பும் கிளம்பவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்புகள் பெருகி வருகின்றன. முன்னேற்றம் வரவேண்டுமானால் சிலவற்றை ஏற்று கொள்ளத்தான் வேண்டும். அப்போது தான் தமிழகம் முன்னேறும். 8 வழி சாலை திட்டத்தால் நல்ல பலன் தமிழகத்துக்கு கிடைக்கும். இந்த சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள முதல்வரின் உறவினர்களுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. அதைபற்றி முதல்வர்தான் விளக்கம் தர வேண்டும்.
உலகில் தலை சிறந்த நடிகராக திகழ்ந்த சிவாஜி கணேசனின் பிறந்தநாளை அரசு விழாவாக, தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. நடிப்புத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர்கள், துணை நடிகர்களுக்கு சிவாஜி பெயரில் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications