கருணாநிதியுடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு - திருமண அழைப்பிதழ் தந்ததாக தகவல்
சென்னை: சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திடீரென சந்தித்து பேசினார்.
சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க, காங்கிரஸ் கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர தி.மு.க. வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸை கூட்டணியில் சேர்க்கவும் தி.மு.க.வில் எதிர்ப்பு உருவாகி உள்ளது.

இதனிடையே பா.ஜ.க., தே.மு.தி.க, பா.ம.க. கட்சிகளை தி.மு.க. அணியில் இணைக்கவும் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகி இருந்தன. பா.ஜ.க. தலைமையிலான இந்த அணிக்கு 100 இடங்களை ஒதுக்கவும் தி.மு.க.வும் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திடீரென இன்று சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும் இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், என்னுடைய இல்ல திருமண அழைப்பிதழ் கொடுக்கவே கருணாநிதியை சந்தித்தேன். இச்சந்திப்பில் எந்த ஒரு அரசியலும் பேசவில்லை.
தமிழக மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண எத்தனை கோடியை வேண்டுமானாலும் செலவு செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது என்றார்.
நெருப்பில்லாமல் புகையுமா?
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications