பொங்கல் பரிசு ரூ 1000 ரொக்கமும், பச்சரிசி, வெல்லம் உள்பட பரிசு பொருட்கள் எப்போது விநியோகம்?
சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ 1000 ரொக்கம் வரும் ஜனவரி 5-ஆம் தேதி முதல் கிடைக்கும் என தெரிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் மக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம். அந்த பரிசில் பச்சரிசி, சர்க்கரை, 5 கிராம் ஏலக்காய், தலா 20 கிராம் முந்திரி- திராட்சை, கரும்பு துண்டு ஆகியன வழங்கப்படும்.

ஆனால் கடந்த ஆண்டு முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ 1000 ரொக்கப் பணத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் அந்த பரிசு பொருட்களும் ரொக்கமும் இந்த ஆண்டும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு அவை உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னர் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு நிலவி நீதிமன்றம் சென்றதை அடுத்து இந்த பொங்கல் பரிசு வழங்குவது தள்ளி போனது. இதனால் உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 27-ஆம் தேதியும் நாளையும் நடந்து முடிந்து விடும்.
அதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் மேற்கண்ட பரிசுப் பொருட்களை கொள்முதல் செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. குடும்ப அட்டைதாரர்களுக்கு இரு 500 ரூபாய் நோட்டுகளை வழங்க மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் நோட்டு கட்டுகள் தயார் நிலையில் உள்ளன.
அரசு உத்தரவு பிறப்பித்ததும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் வரும் 5-ஆம் தேதி முதல் இவற்றை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிகிறது. அனைத்தும் தயார் நிலையில் உள்ள அரசு அறிவித்ததும் பொருட்களை வழங்கிவிடுவோம் என ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications