மக்கள் நலனில் அக்கறை கொண்ட புதிய முதல்வர், புதிய அரசு.. ராமதாஸ் பொங்கல் வாழ்த்து!!!
சென்னை: தை பிறக்கும்... நல்ல வழி பிறக்கும் மாற்றம் வரும்... முன்னேற்றம் வரும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அறிவு செறிந்த, மக்கள் நலனில் அக்கறை கொண்ட முதலமைச்சரின் தலைமையில் புதியதோர் தமிழகம் விரைவில் உருவாகப்போவது உறுதி என்றும் அவர் கூறியுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:
தமிழர் திருநாளான பொங்கல் பெருவிழாவையும், தமிழ் புத்தாண்டையும் உற்சாகத்துடன் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் சொந்தங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அறுவடைத் திருநாளான பொங்கலை இந்தியாவின் அனைத்து மாநிலத்தவரும் வெவ்வெறு பெயர்களில் கொண்டாடி மகிழ்ந்தாலும், அத்திருநாளை உருவாக்கியவர்கள் தமிழர்கள் தான். அதனால் தான் இத்திருநாளுக்கு தமிழர் திருநாள் என்ற பெயர் உருவானது. இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இத்திருநாளில் தமிழர் அனைவரும் வீடுகளில் தோரணம் கட்டி,புத்தாடை அணிந்து, புது நெல் குத்தி, புதுப் பானையில் பொங்கலிட்டு மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ வேண்டும்.
பொங்கல் கொண்டாட்டத்தின் அடையாளங்களான கரும்பு, சர்க்கரைப் பொங்கல், வாழைப்பழம் உள்ளிட்ட அனைத்துமே இனிப்பை பிரதிநிதித்துவப்படுத்துபவை ஆகும். ஆனால், ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற தன்மையால் அனைத்து விவசாயிகளுக்கும் இந்த ஆண்டு கசப்பே பரிசாகக் கிடைத்திருக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையில் சேதமடைந்த பயிர்களுக்கு போதிய இழப்பீடு அறிவிக்கப்படவில்லை. மிகக் குறைந்த அளவில் அறிவிக்கப்பட்ட இழப்பீடும் கிடைக்குமா? என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. உழவர்களைப் போலவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களும், சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோரும் தமிழக அரசால் கைவிடப்பட்ட நிலையில் தவிக்கின்றனர்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்..... அதேபோல், இந்த தமிழ் புத்தாண்டு இனிமையான மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் தமிழக மக்களுக்கு கொண்டு வரும். ஒரு சொட்டு மது இல்லாத, ஒரு பைசா ஊழல் இல்லாத, கல்வி மற்றும் சுகாதாரச் செலவு இல்லாத, குடிசைகள் இல்லாத, வறுமையில்லாத, வளம் நிறைந்த, அறிவு செறிந்த, மக்கள் நலனில் அக்கறை கொண்ட முதலமைச்சரின் தலைமையில் புதியதோர் தமிழகம் விரைவில் உருவாகப்போவது உறுதி. அதற்காக உழைக்க இந்த தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளில் தமிழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications