"வீட்டுக்கு வா.. நீ பைனல் இயர்ல?.. நட்பை வளர்த்துக்கலாம்".. மாணவியிடம் போனில் பேசிய பேராசிரியர்
பொன்னேரி: பொன்னேரி அரசுக் கல்லூரியில் மாணவி ஒருவரை வீட்டுக்கு வருமாறு அழைத்து பேராசிரியர் செல்போனில் பேசும் ஆடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து பேராசிரியரை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
Recommended Video
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசுக் கல்லூரியில் 4745 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ஒருவர் மாணவியை தமது வீட்டிற்கு வா என செல்போனில் அழைக்கும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் மகேந்திரன் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவியின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில் மாணவியை வீட்டிற்கு வரச் சொல்லியும், இறுதியாண்டு படித்து வருவதால் வீட்டுக்கு வந்தால் உபயோகமாக இருக்கும் எனவும் பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து மாணவி நான் ஏன் சார் உங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என கேள்வி எழுப்புகிறார். அதற்கு அவர் நட்பை வளர்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

சுதாரித்த மாணவி
சிறிது நேரம் ஒன்றும் புரியாத மாணவி சுதாரித்துக் கொண்டு அப்படி எல்லாம் நட்பை வளர்க்க தேவையில்லை என்றும் கூறியுள்ளார். அதற்கு விடாத அந்த பேராசிரியர் எனக்கு ஒரு சில பாடக்குறிப்புகள் வேண்டும். அதை கூகுளில் பிரிண்ட் அவுட் எடுத்து கொடுக்க வேண்டும்.

பிரின்ட் அவுட் எடுத்ததில்லை
அதற்கான காசை கொடுத்து விடுகிறேன் என மாணவியிடம் பேராசிரியர் கூறுகிறார். அதற்கு மாணவி என்னை என் பெற்றோர்கள் அதுபோன்று எங்கேயும் வெளியே அனுப்ப மாட்டார்கள். நானே இதுவரை அது போன்று எங்குச் சென்றும் பிரின்ட் அவுட் எடுத்தது இல்லை. எதற்காக என்னிடம் கேட்கிறீர்கள் என அந்த மாணவி கேட்கிறார்.

பேராசிரியர்
அதற்கு அந்த பேராசிரியரோ நீயும் நானும் ஒரே ஜாதி. அதனால் நட்பை வளர்க்கலாம் என பேராசிரியர் அந்த ஆடியோவில் பேசுகிறார். இதே போல தான் எழுதிய புத்தகங்களை மாணவர்கள் வாங்கி கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. உதவிப் பேராசிரியர் பேசியதாக ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னேரி காவல் துறை
இந்த நிலையில் பொன்னேரி காவல்துறையினர் இதுகுறித்து கல்லூரியில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் போது உதவிப் பேராசிரியர் இந்த ஆடியோவில் இருப்பது தமது குரல் இல்லை என்றும் தன்னை பிடிக்காவர்கள் அளித்த மொட்டை கடித புகார் என்று கூறி வருகிறார். கல்லூரியிலும் 3பெண் பேராசிரியர்களை கொண்ட மகளிர் குறைதீர்க்கும் குழுவை கொண்டு விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை கல்லூரி இயக்குநருக்கு அளித்துள்ளதாக கல்லூரி முதல்வர் சேகர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர்
இதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட கல்லூரி உதவிப் பேராசிரியர் மகேந்திரனை போலீஸ் ஜீப்பில் ஏற்றி கொண்டு விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது கல்லூரி வாயிலில் குழுமியிருந்த மாணவர்கள் வழிவிடாமல் பேராசிரியரை ஏற்றி சென்ற போலீஸ் வாகனத்தை தாக்கியதால் சிறிது பரபரப்பு நிலவியது. தொடர்ந்து மாணவர்களை அப்புறப்படுத்தி உதவி பேராசிரியர் மகேந்திரனை காவல் நிலையம் கொண்டு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உதவி பேராசிரியர் மகேந்திரன் மாணவிகளுக்கு பல்வேறு வகைகளில் பாலியல் ரீதியிலான தொல்லைகள் அளித்துள்ளதாகவும், வன்கொடுமை சட்டத்தில் அவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் அமைப்பினர் கோரிக்கை வைக்கின்றனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications